darbar
  • January
    24
    Friday

Main Area

Mainஇந்த கிளுகிளு கீரையை சாப்பிட்டால் , வயாகராவே வேண்டாம்!

sandi keerai
sandi keerai

மேலே படத்தில் உள்ள மரத்தை நீங்கள் போகிற வழியில் பார்த்திருக்கூடும். அது என்ன மரம் என்றோ, அதன் இலைகள் மருத்துவ குணம் நிறைந்தது என்றோ பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தமிழக கிராமங்களில் உள்ள வயதான பெருசுகளிடம் கேட்டால் நாகரீகமாக இருப்பவர்கள் ‘நச்சுக்கொட்டை கீரை என்றும், நக்கலான பெருசுகளிடம் கேட்டால் லஜ்ஜை கெட்ட கீரை என்றும் சொல்வார்கள்! சில இடங்களில் ‘சண்டிக்கீரை’ என்றும் இந்தக் கீரைக்கு பெயர் சொல்கிறார்கள்.

sandikkeerai

இதன் பெயரிலேயே சங்கதியைச் சொல்லி விட்டார்கள் நம் முன்னோர்கள்.
‘லஜ்ஜை’ என்றால் வெட்கம். கீரைக்கு எதுக்கு வெட்கம்!? என்றால், இந்தக்கீரை சாப்பிட்டால்.வெட்கம் போய்விடும், கூச்சமில்லாமல் இன்னும் வேண்டும் என்று கேட்கத்தோன்றுமாம்! எதை? அதைதான்…!

இந்தக்கீரையை சிலர் ‘சண்டிக்கீரை’ என்றும் சொல்கிறார்களே, ஏன் என்று  சிந்தியிங்கள். ’சண்டி’ என்றால் என்ன? சண்டிக்குதிரை என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் இல்லையா, அப்படி அழைப்பதற்கு என்ன காரணம்? சாதாரண குதிரையில் யார் வேண்டுமானாலும் சவாரி செய்யலாம்! சண்டிக்குதிரையைச் சமாளிக்க அபார ‘திறமை’  இருக்க வேண்டும்!

அந்த வலிமையைத்தந்து உங்களையும் உங்கள் இணையையும் வெட்கம் மறந்து வேட்கை தீர்க்க தூண்டுமாம் இந்த லஜ்ஜை கெட்டகீரை! இது மரமாக வளரக்கூடியது. கிராமப்புறங்களில் இதை அதிகமாக பார்க்க முடியாது. நகர்புற வீடுகளில் இதன் சிறப்புத் தெரியாமல் இதை குரோட்டன்ஸ் போல அழகுக்கு வளர்க்கின்றனர் பலர்.

Pisonia grandis என்பது இதன் தாவரவியல் குடும்ப பெயர். அந்தக்காலத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த பிசோன் என்கிற மருத்துவரை கவுரவிக்க வேண்டி அவர் பெயரையே இதற்கு வைத்துவிட்டனர். கிரேண்டிஸ் என்பது இதன் பெரிய இலைகளுக்காக கிடைத்த பெயர். ஆரோக்கியமான லஜ்ஜை கெட்ட கீரையின்  இலை, ஒரு அடி நீளமும் அரை அடி அகலமும் இருக்கும். இது அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. 

இதில் ஆண் மரம் பெண் மரம் என இரண்டு வகைகள் உண்டு. ஆண்மரம் சற்று உயரமாக வளரும். இதன் இலைகள் அடர் பசுமை நிறத்தில் இருக்கும், பெண் இலைகள் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தில் இருக்கும்.ஆண் மற இலையை விட பெண் மர இலை மென்மையானதாக இருக்கும். இந்த இலைகளில்தான் எல்லா மாயங்களும் மருந்துகளும் இருக்கின்றன! 

பொதுவாகவே இந்த இலைகளில் வைட்டமின் ‘ஏ’ ‘தையாமின்’ ‘ரிபோபிளவின்’ வைட்டமின் ‘சி’ ஆகியவை உள்ளன. மூட்டு வலிக்கு இது மிகச்சிறந்த மருந்து.பர்ஃபார்மென்ஸ் சரியில்லாத ஆன்களை மூட்டுச்செத்தவன் என்று சொல்வது கிராமப்புற சீக்ரெட் கோட். தொடர்ந்து பதினைந்து நாள் இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள உங்கள் மூட்டுக்கள் புது பலம் பெரும். அதோடு சிறு நீர் பெருகும். ரத்தம் சுத்தமாகும்.

soup

இதை சமைப்பது எப்படி என்றும் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா, இதை மூன்று விதமாக சமைக்கலாம். லஜ்ஜை கெட்ட கீரையின்  இலைகள் ஐந்தாறு, ஒரு தக்காளி, நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகு சேர்த்து வேகவைத்து சூப்பாக சாப்பிடலாம். அடுத்தது, பாசிப்பருப்பு, சீரகம், தேங்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து  லஜ்ஜை கெட்ட கீரையை  கூட்டு செய்து, சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்சேர்த்து சாப்பிடலாம். 

ratha poriyal

அடுத்த ஐட்டம் நான் வெஜ் பிரியர்களுக்கு - ஆட்டு ரத்தம் கொஞ்சம் வாங்கி வாருங்கள். பெண் லஜ்ஜை கெட்ட கீரையின்  இலைகள் கொஞ்சம் பறித்துக் கொள்ளுங்கள். சட்டியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, சோம்பு போட்டு தாளியுங்கள். அதில் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கீரையை வதக்குங்கள். பதமாக வதங்கி வந்ததும் கொஞ்சம் சீராக தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை வாசம் போனதும் ஆட்டு ரத்தத்தை கரைத்து உற்றி, அளவாக உப்பு போட்டுக் கிளறுங்கள். ரத்தம் வெந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் போதும். தரமான ஆர்கானிக் வயக்ரா ரெடி!

2018 TopTamilNews. All rights reserved.