கண் மஞ்சளாக மாறினால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியா?

 

கண் மஞ்சளாக மாறினால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியா?

கல்லீரல்… மனித உடலில் பித்தநீர் சுரக்கவும், ஹீமோகுளோபின் அமைப்பில் காணப்படும் இரும்பு மற்றும் சில தனிமங்கள், உயிர்ச்சத்துகள் உள்ளிட்டவற்றை சேமித்து வைப்பது என ஏராளமான பணிகளைச் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் மனித உடலில் 500-க்கும் மேற்பட்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கல்லீரல்.

கண் மஞ்சளாக மாறினால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியா?பரம்பரை, வைரஸ்:
மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் கல்லீரலில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாமலிருக்க வேண்டும். மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிக எடை, நீண்ட நாள் மருந்து எடுத்துக் கொள்வது, வைரஸ், பரம்பரை என பல்வேறு காரணங்களாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம்.

ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அடிக்கடி உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வார்கள். சிலநேரங்களில் முதுகுவலி, வயிற்றுவலி, காலின் கீழ்ப்பகுதியில் ஒருவித அயற்சி ஏற்படும். சிலருக்கு வயிற்றைப் பிரட்டுவது, பசியின்மை போன்ற காரணங்கள் ஏற்படும். உடல் நிறம் மஞ்சளாவது, கண்ணிலுள்ள வெண் விழிப்பகுதி மஞ்சளாக மாறுவதும்கூட கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கண் மஞ்சளாக மாறினால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியா?குழப்பமான மனநிலை:
அதிக எடை இருக்கும் சிலர் எடை குறைக்க எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லையென்றால் அதுவும் கல்லீரன் பாதிப்பின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. கழுத்து மற்றும் கை உள் மடிப்புப் பகுதிகளில் அடர்ந்த கறுப்பு நிறம் காணப்படுவது, சருமத்தில் ஆரோக்கியமின்மை, வயிற்றுவலி, பிடிப்பு, தலைவலி, குழப்பமான மனநிலை, கவனக்குறைவு போன்றவைகூட கல்லீரன் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

சிலருக்கு அதிகமாக பசி எடுக்கும். இதனால் கிடைத்த உணவுகளைச் சாப்பிடுவார்கள். முக்கியமாக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். சிலருக்கு என்ன காரணமென்று அறிய முடியாத அளவுக்கு திடீர் நலக்குறைவு ஏற்படும். இப்படி பல்வேறு அறிகுறிகள் வெளிப்படலாம்.

கண் மஞ்சளாக மாறினால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியா?வீண் பயம் வேண்டாம்:
இந்த அறிகுறிகளில் சில மட்டுமோ அல்லது அனைத்துமோ இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. இந்த அறிகுறிகள் கொழுப்பு நிறைந்த கல்லீரலின் பாதிப்பாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இதய பாதிப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், புற்றுநோய் என கடுமையான வேறு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். பின்னால் வரும் பாதிப்புகளை முன்கூட்டி அறிவிக்கும் அந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அதேநேரத்தில் இந்த அறிகுறிகள் சிலருக்கு சாதாரணமாகக்கூட ஏற்படலாம் என்பதால் வீணாக பயப்பட வேண்டாம். என்ன பாதிப்பு என்பதை மருத்துவரே முடிவு செய்யட்டும். நீங்களாகவே கற்பனை செய்துவிடாதீர்கள்.