• March
    31
    Tuesday

Main Area

Main



"புரொமோஷனுக்கு த்ரிஷா வராவிட்டால் சம்பளத்தில் ஒரு தொகையை திருப்பி தர வேண்டும்" தயாரிப்பாளர் எச்சரிக்கை!

த்ரிஷா
த்ரிஷா

90'ஸ் கிட்ஸ்கிற்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவர்  த்ரிஷா. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் முன்னணி  நடிகைகளுள் ஒருவராக  வலம் வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். ஒருகட்டத்தில்  பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த இவருக்கு  96 திரைப்படம் அவரது சினிமா கெரியரில் புதிய திருப்புமுனையைத் தந்துள்ளது.

ttn

தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள த்ரிஷா, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் 'ராங்கி' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இவரது நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் 'பரமபத விளையாட்டு'.  திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ttn

 24Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ttn

இந்நிலையில் பரமபத விளையாட்டு பட புரொமோஷனுக்கு த்ரிஷா வர மறுத்தால், அவர் சம்பளத்தில் ஒரு தொகையை திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் டி.சிவா எச்சரிக்கை  விடுத்துள்ளார். த்ரிஷா பட புரொமோஷனுக்கு வர மறுத்ததாகத் தகவல் வெளியாகிய நிலையில் தயாரிப்பாளர் டி.சிவா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.