சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

 

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

சசிகலாவின் அரசியல் நகர்வு எப்படியிருக்கும் என்பதில் குழப்பமே நீடித்துவருகிறது. அவர் அதிமுகவை கைப்பற்றுவாரா அல்லது அமமுகவுக்கு செல்வாரா என எந்த அஸ்திரத்தைக் கையிலேந்த போகிறார் என்று இன்னமும் உறுதியாகவில்லை.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?
சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

அவ்வப்போது டிடிவி தினகரன் கொடுக்கும் பேட்டியைத் தான் சசிகலாவின் வாய்ஸாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இச்சூழலில், நேற்று தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா போட்டியிட சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

சசிகலா சட்டப்போராட்டம் மேற்கொள்ள காரணம் என்ன?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒருவர் குற்றவாளியாக உறுதிசெய்யப்பட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது. ஒருவேளை அவர் தண்டனை அனுபவித்தால், அந்தத் தண்டனைக் காலம் முடிந்த நாளிலிருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்குப் போட்டியிடக் கூடாது. 2014ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பினால் ஜெயலலிதா பதவியிழந்தது அனைவரும் அறிந்ததே.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

ஆனால், 2015ஆம் ஆண்டு மேல்முறையீட்டில் நீதிபதி குமாரசாமியால் விடுதலை செய்யப்பட்டார். அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட 2016ஆம் ஆண்டு தேர்தல் வரை வழக்கு நிலுவையில் இருந்தது. ஆகையால் அவர் குற்றமற்றவராகக் கருதப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார். ஒருவேளை அவர் இறக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாகப் பதவியிழந்திருப்பார்.

அதேபோல 2000ஆம் ஆண்டில் டான்சி ஊழல் வழக்கு தீர்ப்பால் அவரின் முதல்வர் பதவியை 162 நாட்கள் ஓபிஎஸ் பார்த்துக்கொண்டாலும், அதில் விடுதலை செய்யப்பட்டதால் மீண்டும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரானார். ஆனால், இங்கே சசிகலாவின் கதையே வேறு. அவர் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளி. அவர் குற்றமற்றவர் அல்ல என்பதால் சட்டப்படி அடுத்த ஆறு வருடத்திற்கு அவரால் போட்டியிட முடியாது. அவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட எந்த முகாந்திரமும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு எப்படி தினகரன் ‘சட்டப்படி முயற்சிகள்’ எடுப்பதாகக் கூறினார்.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

பாஜகவுக்காக வளைந்துகொடுத்தது தேர்தல் ஆணையமா? சட்டமா?

தற்போது சிக்கிம் மாநில முதல்வராக இருக்கும் பிரேம் சிங் தமாங்கும் தேர்தலுக்கு முன் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தவர். 2018ஆம் ஆண்டு வெளியில் வந்தார். அவருக்கு சட்டப்படி ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை இருந்தது. இச்சூழலில், சிக்கிமில் 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

அத்தேர்தலில் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா-பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இதையடுத்து தமாங் முதல்வராவதற்கு பாஜக தலைமையிடம் விருப்பம் தெரிவித்தார். ஆனால், சட்டச்சிக்கல் இருந்தது. கூடவே ஓட்டையும் இருந்தது. தேர்தல் ஆணையத்திடம் தனக்கு விதித்திருக்கும் 6 ஆண்டுகள் தடையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாங் கேட்டிருந்தார்.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 11இன் படி தேர்தல் ஆணையம் சில காரணங்களுக்காக இந்த விதிமுறைகளில் தளர்வு வழங்க முடியும் என்று இருக்கிறது. இதன்மூலம் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உத்தரவை ஒரு சிலருக்கு நிறுத்திவைக்க முடியும் அல்லது அந்தத் தண்டனைக் காலத்தை குறைக்க முடியும். இதை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவருக்கு 13 மாதங்களாகத் தடையைத் தளர்த்தியது. அவர் முதல்வராகப் பொறுப்பேற்கும் தருவாயில், அவரின் தடைக்காலம் முடிவடைந்துவிட்டதால் முதல்வராகப் பதவிப் பிரமாணம் பெற்றார்.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

சசிகலாவுக்குப் பரிவு காட்டுமா டெல்லி மேலிடம்?

தற்போது இந்த ஓட்டையைப் பயன்படுத்தியே சசிகலாவுக்கும் தடையில் தளர்வு பெற தினகரன் தரப்பு முயற்சிசெய்துவருகிறது. அதற்கு அமித் ஷா தரப்பின் ஒத்துழைப்பு வேண்டும். டெல்லியைப் பிடித்தால் தான் சசிகலாவுக்கான தளர்வு குறித்து யோசிக்கவாது முடியும். ஆனால் அந்தத் தரப்பு மருந்துக்குக் கூட தினகரன் தரப்பிடம் பேசுவதில்லை. நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரின் கையையும் உயர்த்திப் பிடித்து, சசிகலாவின் தலையில் கையை வைத்துவிட்டார்.

சசிகலா முதல்வராவது சட்டப்படி சாத்தியமா? டெல்லி மேலிடம் ஒத்துழைக்குமா?

டெல்லிக்கும் தினகரனுக்கும் எதாவது டீல் நடந்தால் மட்டுமே தளர்வு சாத்தியம். நீதிமன்றத்திற்குச் சென்று தளர்வு கேட்டாலும் சாத்தியமில்லை. ஏனென்றால் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. அப்படியே பேசி தளர்வு வாங்கினாலும் சசிகலாவால் போட்டியிட முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், தளர்வுக் காலத்தைப் பொறுத்தே அதுவும் அமையும். சசிகலா விடுதலையாகி முழுவதுமாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. தேர்தல் சமயத்தில் 3 மாதங்கள் தான் முடிவடைந்திருக்கும். ஆகவே, அவர் அதிமுகவைக் கைப்பற்றுவதிலேயே கவனம் செலுத்துவார்.