Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் மலம் கறுப்பாக வெளியேறினால், அல்சர் முற்றியநிலையா?

மலம் கறுப்பாக வெளியேறினால், அல்சர் முற்றியநிலையா?

அல்சர்… வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் இந்தப் பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை குடல்புண் என்று சொல்வது சரியாக இருக்கும். சரியான நேரத்தில் சரியான உணவுகளைச் சாப்பிடாததால் வரக்கூடிய இந்தப் பிரச்சினை குடலில் ஒருவிதமான எரிச்சலை ஏற்படுத்தும். இது ஒரு நீண்டகால பிரச்சினை என்பதை முதலில் உணர வேண்டும்.


அமிலம் சுரப்பு:
நாம் உண்ணும் உணவு இரைப்பையைச் சென்றடைந்ததும் அந்த உணவு செரிமானமடைய சில அமிலங்கள் சுரக்கும். இந்தச் செயல்பாடானது வழக்கமாக நாம் சாப்பிடும் நேரத்தில் நடப்பது இயல்பு. உணவை உண்டாலும் உண்ணாவிட்டாலும் அமிலம் சுரந்துவிடும். இந்த நேரத்தில் இரைப்பையில் உணவு இல்லாவிட்டால் தோலின் மேல்பரப்பு அல்லது இரைப்பைச் சுவற்றை அமிலம் பதம்பார்த்துவிடும். நாளடைவில் குடலில் புண் உண்டாகிவிடும்.

பொதுவாக உணவுக்குழாய் அல்லது முன்சிறுகுடலில் புண்கள் ஏற்பட்டால் அதை பெப்டிக் அல்சர் என்று சொல்வார்கள். ஆனால், இரைப்பையில் ஏற்படும் புண்கள் காஸ்ட்ரிக் அல்சர் எனப்படும். இத்தகைய அல்சர் ஒருவருக்கு வந்திருந்தால் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதிக்கு இடையே உள்ள பகுதியிலோ அல்லது வயிற்றின் நடுவிலோ எரிவதுபோன்ற உணர்வு ஏற்படும். அல்லது தாங்கமுடியாத வலி ஏற்படும். சாப்பிடாத நேரத்தில் வலி தீவிரமாக இருப்பதுடன் சில மணி நேரங்கள்கூட நீடிக்கும்.


வயிற்றில் வலி:
வயிற்றில் ஏற்படும் இந்த வலி சில நேரங்களில் செரிமானக்கோளாறு காரணமாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, என்ன காரணத்தால் வலி வந்திருக்கிறது என்பதை இனங்காண வேண்டும். பொதுவாக அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணுக்கான அறிகுறிகள் மிக தீவிரமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் மருத்துவரை சந்திப்பதே நல்லது. இதுபோன்ற சூழலில் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் புண்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

ஒருவர் அல்சர் என்னும் குடல்புண்ணால் பாதிக்கப்பட்டால் அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிற்றுவலியுடன் சேர்ந்து இந்த நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அது அல்சருக்கான அறிகுறியே. மேளும் தொடர்ச்சியாக வாந்தி எடுப்பது, ரத்தவாந்தி எடுப்பது போன்றவையும் அல்சரின் அறிகுறிதான்.


குமட்டல் – ஏப்பம்:
உடல் எடை குறைவது, உணவு உண்பதில் விருப்பமின்மை, சாப்பிட்டவுடன் புளித்த ஏப்பம் வருவது, குமட்டல் உணர்வு போன்றவையும் அல்சருக்கான அறிகுறிகளே. மலம் கறுப்பாக இருந்தால் அல்சர் முற்றிய நிலை என்று பொருள். இதுபோன்ற சூழலில் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

அல்சர் எனப்படும் குடல்புண் தீவிரமாகி வயிற்று அறைகள் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டால் வயிற்று அறையில் உள்ள தோல்களில் வீக்கம் ஏற்படும். இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டியிருக்கும். அதேபோல் சாப்பிட்ட உணவு வயிற்றுக்கு செல்லமுடியாதவாறு தடைகள் ஏற்படும் சூழலில் உண்ணும் உணவு வாந்தியாக வெளியேறிவிடும். இந்தச் சூழலிலும் அறுவை சிகிச்சைதான் வழி. ஆகவே, சில அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். கருப்பு சட்டை அணிந்த ஓபிஎஸ் - இபிஎஸ்...

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள்,காவலர் உட்பட 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே...

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ...
Do NOT follow this link or you will be banned from the site!