“பதில் சரியில்லைனா நடவடிக்கை கன்பார்ம்” – சூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆணையம்!

“பதில் சரியில்லைனா நடவடிக்கை கன்பார்ம்” – சூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆணையம்!

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எழுந்தன. தகுதியில்லாதவர்கள் பணி நியமனம், கல்லூரிக்கு வாங்கிய பொருட்களில் முறைகேடு என சூரப்பாவுக்கு எதிராக புகார்கள் குவிந்தன. சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்தே அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டது மோதலை மேலும் வலுக்கச் செய்தது.

“பதில் சரியில்லைனா நடவடிக்கை கன்பார்ம்” – சூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆணையம்!

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. சூரப்பாவுக்கு ஆளுநர் பன்வாரிலாலின் ஆதரவு இருந்தபோது, சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கலையரசன் குழு தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியது. தற்போது ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அவர்கள் கூறுகையில், “சூரப்பா மீதான விசாரணை பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. முறைகேடுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“பதில் சரியில்லைனா நடவடிக்கை கன்பார்ம்” – சூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆணையம்!

ஒரு வாரத்துக்குள் அதற்கான விளக்கத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூரப்பாவின் பதில் மனுவை எதிர்பார்த்துள்ளோம். அதன் அடிப்படையில் அறிக்கையை இறுதிசெய்து தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்வோம். அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்” என்றார்கள்.