• February
    25
    Tuesday

Main Area

Mainமு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தால் என்னாகுமோ..? படு ரகசியமாக காரியத்தை நடத்தும் கனிமொழி..!

மோடி
மோடி

கருணாநிதி மறைவுக்குப் பின்  தி.மு.க.வின் தலைவராகிவிட்ட ஸ்டாலின்,  மாநில அரசியலில் முழு கவனம் செலுத்தும் அதே வேளையில் மத்தியிலும் தி.மு.க.வை தனிச்சிறப்புடைய அதிகாரத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. காரணம், அ.தி.மு.க.வின் லகான் மத்திய அரசின் கையில் இருக்கிறது. டெல்லியில் தங்களுக்கு ஏற்ற வகையில் லாபி செய்தால்தான், தமிழகத்தின் அரசியல் சூழலை தங்களுக்கு ஏற்றவாறு டியூன் செய்து கொள்ள முடியும் என நம்புகிறது தி.மு.க.

kanimozhi

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகள் துவங்க இருக்கும் நிலையில், எப்படி கருணாநிதியின் டெல்லி மனசாட்சியாக முரசொலி மாறன் விளங்கினாரோ அதேபோல் தனக்கு மிக விசுவாசமான ஒரு மனசாட்சி டெல்லியில் வேண்டுமென்று நினைக்கிறார் ஸ்டாலின். அதற்கு அவர் முன் இருக்கும் ஒரே சாய்ஸ் தன் மகன் உதயநிதிதான். ஆம், உதயை தங்களின் டெல்லி பிரதிநிதியாக முன்னிறுத்தி, உருவாக்கி, உரமேற்றிட முடிவு செய்துவிட்டாராம் ஸ்டாலின். 

அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சென்று, தாக்கப்பட்ட மற்றும் போராட்டக்கார மாணவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறிய விஷயம். அந்த இடத்தில் சுமார் மூன்று மணி நேரமாவது இருந்து மிக நிதானமாக, மாணவர்களிடம் பல விஷயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் உதய்.uday 

அவரது இந்த பயணம் தி.மு.க.வின் சென்னை முக்கிய புள்ளிகளால் பத்திரிக்கைகள் மற்றும் மீடியாவில் பெரிய அளவில் பிரமோட் செய்யப்பட்டது. டெல்லியிலும் உதய்க்கு பெரும் வரவேற்பு வைபரேஷன் கொடுக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப டெல்லிக்கு ச்சும்மா பறந்து சென்றா மட்டும் போதாது, அங்கே தன் கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வ நபராக மகன் அமர வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். 

அதற்கு ஏதுவாக இன்னும் மூன்று மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த சில ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகாலம் முடியும் விஷயம் அவருக்கு கை கொடுக்கிறது. இதில் மூன்று எம்.பி.க்கள் தி.மு.க.வால் நிரப்பப்படும். அதில் ஒருவராக உதயநிதியை இப்போதே முடிவு செய்துவிட்டார் ஸ்டாலின் என்கிறார்கள். உதய் ராஜ்யசபா எம்.பி.யாகி அங்கே சென்ற பின், ஒட்டுமொத்தமாக டெல்லி தி.மு.கவானது அவரது கரங்களில் ஒப்படைக்கப்படுமாம். சீனியர் மோஸ்ட் பாலு முதல், ஜூனியர் மோஸ்ட் கலாநிதி வீராசாமி வரை அனைவரும் அவரது வழிகாட்டுதல் படியே அரசியல் செய்வர். உதய்யின் சொந்த அத்தை கனிமொழி எம்.பி.யும் இதில் அடங்குவார். 

stalin

ஸ்டாலினின் இந்த மூவ்வினை டெல்லி தி.மு.க. புள்ளிகள் விரும்பவில்லை. கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை டம்மியாக்கிடவே தலைவர் ஸ்டாலின் இப்படியொரு முடிவெடுக்கிறார் என்று புகைகிறார்கள். ஆனால், உதயநிதி தி.மு.க. இளைஞரணியின் மாநில செயலாளர் ஆனதிலிருந்து அவரை சின்னவர் என்று மரியாதையாக அழைக்க துவங்கிவிட்ட  தி.மு.க. இளைஞரணியினரோ சின்னவருக்கு எம்.பி. சீட் ரெடி என்று  குஷியாகிறார்கள்.

இப்படி தான் ஓவ்வொரு கட்டமாக ஒதுக்கப்படுவதை உணர்ந்த கனிமொழி, தற்போது அண்ணனுக்கு தெரியாமல் ரகசியமாக தனது வீட்டில் வைத்தே ஒரு ஐடி விங்கை உருவாக்கி தன்னை ப்ரமோட் செய்யும் பணிகளில் இறங்கி இருக்கிறார். அதையும் யாருக்கும் தெரியாமல் மிகமிக ரகசியமாக செய்து வருகிறார். 

2018 TopTamilNews. All rights reserved.