சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட்டால்… தினகரன் கதி?

 

சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட்டால்… தினகரன் கதி?

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. திமுக – அதிமுக தங்கள் கூட்டணி கட்சிகளோடு சுமூக உறவை மேம்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இம்மாத இறுதியில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். அவர் வெளியே வந்ததும், தமிழ்நாடு அரசியல் நிலவரங்களில் பல மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட்டால்… தினகரன் கதி?

முதல் கட்டமாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது நடக்கக்கூடும். அப்படியான சமிக்ஞைகளே தென்படுகின்றன. அதற்கு வலுவேற்றும் விதமாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று பேசியுள்ளார். அவர் பேசிய விதம் வேறாக இருந்தாலும் சொல்ல வந்த விஷயம், திமுகவை வீழ்த்த சசிகலாவைப் பயன்படுத்த போகிறோம் என்பதே.

அதிமுகவோடு சசிகலாவைச் சேர்க்க இருக்கிறார்களா… இல்லை தினகரன் கட்சியை இணைக்க இருக்கிறார்களா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. அதிமுகவில் ஒரு தரப்பு சசிகலா மற்றும் தினகரன் கட்சியை இணைக்க வேண்டும். தேவைப்பட்டால் அமமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்வோம். 20 – 30 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறதாம். சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் சசிகலாவை மட்டும் அதிமுகவில் சேர்த்து கெளரவ பதவி கொடுக்கலாம் என நினைக்கின்றனர்.

சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட்டால்… தினகரன் கதி?

சசிகலா மட்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டால் தினகரன் என்ன செய்வார் என்ற அடுத்த கேள்வி வருகிறது. ஏனெனில், தம் மகளின் திருமணத்தையே சசிகலா வந்தபிறகுதான் நடத்த வேண்டும் என்று காத்திருக்கிறார். எனவே, சசிகலா அவரையும், அவரை சசிகலாவும் பிரிந்து தனித்தனியே ஒரு முடிவு எடுக்க வாய்ப்பில்லை. அதனால், தினகரன் தன் கட்சியைக் கலைத்து சசிகலாவோடு அதிமுகவின் இணைவதே சாத்தியம் என்று சொல்லப்படுகிறது. கூட்டணி என்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் இந்த ஏற்பாடும் என்று பேச்சு அடிபடுகிறது.

மேலும், தினகரன் + சசிகலாவின் வருகை அதிமுகவின் தலைமைக்கு என்னவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதும் விளங்காத மர்மமாக இருக்கிறது. அவர்கள் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இருக்குமா… இருக்காதா என்பது அடுத்து கிளம்பும் பூதம். ஆக, இன்னும் ஒரு மாதத்திற்கு சசிகலாவின் வருகையும் அதன் பின்னான சிக்கல்களும்தான் விவாத பொருளாக மாறும் என்பதே யதார்த்தம்.