“சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும்” : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

“சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும்” : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டிலிருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

“சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும்” : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாகச் சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார். சிறையிலும் சசிகலா நடத்திய சொகுசு வாழ்க்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது மூன்று ஆண்டுகள் சசிகலா சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

“சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும்” : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

இந்நிலையில் நாகை மாவட்டம் செருதூர் பகுதியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமை தான் முடிவு செய்யும்.நான் சாதாரண மாவட்ட செயலாளர் தான்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பொறுப்பேற்ற நிலையில் அவர் சிறைக்கு சென்றது கவனிக்கத்தக்கது.