“என் கையில் தமிழ்நாடு சிக்கினால்” – ‘அதிபர்’ சீமான் போடும் ‘சர்வாதிகார’ ரூல்ஸ்கள்!

 

“என் கையில் தமிழ்நாடு சிக்கினால்” – ‘அதிபர்’ சீமான் போடும் ‘சர்வாதிகார’ ரூல்ஸ்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்வாதிகாரம் குறித்தே பேசிவருகிறார். இந்த மண் மட்டும் எனக்கு கிடைத்தால் என்று கூறி கையை முறுக்குகிறார். தன்னை ஒரு அதிபராகவே நினைத்து தேர்தல் பிரச்சாரத்திலேயே பல ரூல்ஸ்களை போட்டு மிரட்டுகிறார்.

“என் கையில் தமிழ்நாடு சிக்கினால்” – ‘அதிபர்’ சீமான் போடும் ‘சர்வாதிகார’ ரூல்ஸ்கள்!

வெறும் சர்வாதிகாரம் என்று போட்டால் நன்றாக இருக்காது என்பதால் அன்பையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். மேடைகளில் மோடியை சர்வாதிகாரி என்று விமர்சித்து விட்டு, அதே சர்வாதிகாரத்தைத் தானும் எடுக்கப் போவதாகக் கூறுவது எந்த மாதிரியான நிலைப்பாடு என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், “குறைந்தபட்சம் ஜனநாயகம் இருக்க வேண்டுமென்றால் சர்வாதிகாரம் வேண்டும்” என்கிறார். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பேச்சு என்ற விமர்சனமும் எழுகிறது.

இச்சூழலில் நேற்று பேசிய அவர், “மக்களின் வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நாட்டை விற்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், யார் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள்? ஊழலைச் சட்டம் போட்டுத் திருத்த முடியாது. ஒவ்வொருவரும் திருந்த வேண்டும். என் கையில் ஆட்சி வந்துவிட்டால் என் ஆட்சியில் ஊழல் செய்தால் பணியிட மாற்றம், தற்காலிகப் பணி நீக்கம் எல்லாம் கிடையாது. நேரடியாக டிஸ்மிஸ்தான். பத்து தலைமுறைகளுக்கு அவர்களுக்கு அரசுப் பணி கிடைக்காது.

“என் கையில் தமிழ்நாடு சிக்கினால்” – ‘அதிபர்’ சீமான் போடும் ‘சர்வாதிகார’ ரூல்ஸ்கள்!

குப்பையை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும். நீங்கள் மாடியிலிருந்து கொட்டினால் அங்கு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு உங்கள் நீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை நிறுத்தப்படும். நீங்கள் குடியுரிமையை இழந்துவிட்டீர்கள் என்று கூறப்படும். இறங்கி வந்துதான் குப்பைகளைக் கொட்ட முடியும். இப்படி இல்லை என்றால் மக்களையும் நாட்டையும் செதுக்க முடியாது. தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்றார். சீமான் அந்நியன் அம்பி போல கருட புராணத்தைப் படித்துவிட்டாரா என்று தெரியவில்லை அதேபோன்ற தண்டனைகளையே அறிவிக்கிறார்.