• February
    24
    Monday

Main Area

Main



என்னை பா.ஜ.க தலைவராக நியமித்தால் சிறப்பாக செயல்படுவேன் : எஸ்.வி சேகர் பேட்டி !

SV sekar
SV sekar

திருக்கடையூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகர், 1970 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவில் இருந்த முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் தற்போது, நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த பா.ஜ.க தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த பட்டியலில் என் பெயரும் உள்ளது. என்னைத் தலைவராக நியமித்தால் சிறப்பாக செயல்படுவேன். எந்த வித ஜாதி அரசியலிலும் ஈடுபட மாட்டேன். பிரதமர் மோடி அறிவிக்கும் சட்டங்கள் பற்றி தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இதற்கு முன்னால் இருந்த தலைவர்கள் தவறிவிட்டனர்" என்று கூறினார். 

ttn

முன்னதாக, பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர ராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால், அந்த பதவி இப்போது காலியாக உள்ளது. அதற்கான தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவராக தேர்ந்தெடுப்பவர்கள் பட்டியலில் எச் ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், வானதி சீனிவாசன், குப்புராமு ஆகிய பெயர்கள் மட்டுமே இருந்தன. அந்த கூட்டத்தில் பா.ஜ.க தலைவராக குப்புராமு நியமிக்கப்படுவதாகப் பேச்சு அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, எஸ்.வி.சேகர் இவ்வாறு பேசியிருப்பது பா.ஜ.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2018 TopTamilNews. All rights reserved.