சொந்த மண்ணிலேயே சரியும் துரைமுருகன் செல்வாக்கு!

 

சொந்த மண்ணிலேயே சரியும் துரைமுருகன் செல்வாக்கு!

திமுக தொண்டன், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என முக்கிய பதவிகளில் வகித்து வந்த துரைமுருகன் தற்போது திமுகவின் மிக முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் உள்ளார். வேலூர் மாவட்டத்தின் ‘மண்ணின் மைந்தன்’ என்று அழைக்கப்படும் இந்த பழுத்த அரசியல்வாதி 1971-ல் காட்பாடி , 1977, 80-களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 1984 இல் சொந்த தொகுதியான காட்பாடியில் மண்ணை கவ்விய இவர் 1989 மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1991இல் காட்பாடியில் தோல்வி, மீண்டும் 1996 இல் வெற்றி என வலம்வந்த இவர் , 2001, 2006, 2011, 2016 தொடர்ந்து வெற்றியையே அம்மாவட்ட மக்களிடமிருந்து பரிசாக பெற்றார்.

சொந்த மண்ணிலேயே சரியும் துரைமுருகன் செல்வாக்கு!

ஆனால் தற்போது வேலூர் திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாம். அதற்கு காரணமாக சொல்லப்படுவது முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் . அதிமுக , அமமுக என கட்சி தாவிய இவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தவர். இவர் காட்பாடி தொகுதியில் நிற்க துரைமுருகனிடம் செல்ல, சீனியர்களோ புதிதாக வந்தவருக்கு வாய்ப்பு தந்தால் தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம் என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சொந்த மண்ணிலேயே சரியும் துரைமுருகன் செல்வாக்கு!

அத்துடன் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மாவட்ட செயலாளர் பதவிக்கும் குறிவைத்துள்ளார் என்று தெரிகிறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் துரைமுருகன் மகன் என்பதை தவிர கதிர் ஆனந்துக்கு என்ன தகுதி உள்ளது? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அத்துடன் துரைமுருகன் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே செல்வது இல்லை? இதனால் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் நின்றால் வெற்றி வாய்ப்பு சுமார் தான் என்று திமுக நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.

சொந்த மண்ணிலேயே சரியும் துரைமுருகன் செல்வாக்கு!

காட்பாடி தொகுதியில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன், குறைகளை கேட்பார்கள், வாக்குறுதிகளை அள்ளி வீசுவார் என்று நினைத்தால் அவரோ எல்லோரும் கண்களை மூடி எனக்காக பிரார்த்தனை செயுங்கள் என்றாராம். இப்படி முதலை கண்ணீர் விட்டே சட்டப்பேரவைக்குள் நுழையலாம் என துரைமுருகன் காணும் கனவு கானல் நீராகும் என்று அதிமுகவினர் ஒருபக்கம் பொரிந்து தள்ளி வருகிறார்கள்.வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் துரைமுருகனின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!