கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- சென்னை மாநகராட்சி!

 

கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- சென்னை மாநகராட்சி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை தினமும் அறிவித்து வருகிறது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், ஆய்வு மேற்கொள்ள நபர்களின் முழு விவரங்களை பெற தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- சென்னை மாநகராட்சி!

இந்நிலையில் கொரோனா அறிகுறி அல்லது அறிகுறி அல்லாதவர்கள், PCR டெஸ்ட் எடுக்க பட்டாலே 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்தார். இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். பரிசோதனை செய்து கொள்வோர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் அதனிமைப்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்துவிட்டு பலர் ஊர் முழுவதும் சுற்றித் திரிவதால் தொற்று பரவுவதாக வந்த ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.