சீன துருப்புக்கள் எல்லை தாண்டவில்லை என்றால் மோதல், பேச்சு வார்த்தை, உயிரிழப்பு ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

 

சீன துருப்புக்கள் எல்லை தாண்டவில்லை என்றால் மோதல், பேச்சு வார்த்தை, உயிரிழப்பு ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

லடாக்கில் சீன துருப்புக்கள் இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்றால் இரு தரப்புக்கும் இடையே மோதல், உயிரிழப்பு, பேச்சுவார்த்தை ஏன் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகிறார். அதில், “சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.

சீன துருப்புக்கள் எல்லை தாண்டவில்லை என்றால் மோதல், பேச்சு வார்த்தை, உயிரிழப்பு ஏன்? – ப.சிதம்பரம் கேள்விஅப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?

http://


பிரதமர் சொல்கிறார், இந்திய மண்ணில் எந்த ஒரு வெளிநாட்டினரும் (சீனா என்று அர்த்தம்) இல்லை. இது உண்மை எனில் மே 5-6ல் ஏன் பிரச்னை ஏற்பட்டது? எதற்காக ஜூன் 16-17ல் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது? இந்தியா ஏன் தன்னுடைய 20 வீரர்களின் உயிரை இழந்தது?
ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?

http://

http://


“கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?
ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?
அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பிரதமர் திரு மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?
சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?” என்று கூறியுள்ளார்.