‘முதல்வர் பழனிசாமியை ஏற்காவிட்டால் கூட்டணியில் இருக்க முடியாது’ : கே.பி. முனுசாமி திட்டவட்டம்!

‘முதல்வர் பழனிசாமியை ஏற்காவிட்டால்  கூட்டணியில் இருக்க முடியாது’ : கே.பி. முனுசாமி திட்டவட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காவிடில் கூட்டணியில் இடம்பெற முடியாது என்று கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

‘முதல்வர் பழனிசாமியை ஏற்காவிட்டால்  கூட்டணியில் இருக்க முடியாது’ : கே.பி. முனுசாமி திட்டவட்டம்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி கே. பி. முனுசாமி, ‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள் தான் கூட்டணியில் இருக்க முடியும். முதல்வர் வேட்பாளரை ஏற்காதவர்கள் எங்கள் கூட்டணியில் இருக்க முடியாது.11 பேர் கொண்ட ஆலோசனை குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது. முழு அதிகாரமும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் கையில் தான் உள்ளது. அவர்கள் இருவருக்கும் உதவியாக துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளனர்” என்றார்.

‘முதல்வர் பழனிசாமியை ஏற்காவிட்டால்  கூட்டணியில் இருக்க முடியாது’ : கே.பி. முனுசாமி திட்டவட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு கடந்த 7 ஆம் தேதி வெளியானது. முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அறிவித்தார். இதை தொடர்ந்து 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.