“பார்களை திறக்க அனுமதி தராவிட்டால், டாஸ்மாக்-களுக்கு பூட்டு போடுவோம்” – பார் உரிமையாளர்கள் அறிவிப்பு

“பார்களை திறக்க அனுமதி தராவிட்டால், டாஸ்மாக்-களுக்கு பூட்டு போடுவோம்” – பார் உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை

மதுபான பார்களை திறக்க விரைவில் தமிழக அரசு அனுமதி வழங்காவிட்டால், வரும் 28ஆம் தேதி டாஸ்மாக் பார் கட்டிடத்தில் செயல்படும் அனைத்து மதுக்கடைகளுக்கும் மேல் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், டாஸ்மாக் கடைகள் 10-வது மாதமாக மூடி உள்ளதால் 7 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

“பார்களை திறக்க அனுமதி தராவிட்டால், டாஸ்மாக்-களுக்கு பூட்டு போடுவோம்” – பார் உரிமையாளர்கள் அறிவிப்பு

மேலும், பார் திறக்காததால் இருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வரும் திங்கட்கிழமை அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறிய நிர்வாகிகள், தங்களது கோரிக்கை ஏற்று விரைந்து பார்களை திறக்க அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அனுமதி வழங்க தவறினால் வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார் கட்டிடத்திற்கு கீழ் செயல்படும் மதுக்கடைகளுக்கு மேல் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.