கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்ததை அறிவித்தால் சித்த மருத்துவத்தை நாடிவரத் தொடங்குவார்கள் – பழ.நெடுமாறன்

 

கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்ததை அறிவித்தால் சித்த மருத்துவத்தை நாடிவரத் தொடங்குவார்கள் – பழ.நெடுமாறன்

கொரோனா சிகிச்சைக்கு அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டியுள்ளார் நெடுமாறன்.

’’சென்னையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1050-க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 750-பேர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர், 300-பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை என அம்மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு அறிவித்திருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அவரையும், அவருடன் தொண்டாற்றி வரும் சித்த மருத்துவப் பணியாளர்களையும் மனமாறப் பாராட்டுகிறேன்.

கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்ததை அறிவித்தால் சித்த மருத்துவத்தை நாடிவரத் தொடங்குவார்கள் – பழ.நெடுமாறன்

பல மாவட்டங்களிலும் கொரோனா நோய் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அலோபதி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதோடு, சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கொரோனா நோய் பரவியிருக்கும் மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக சித்த மருத்துவமனைகளைத் திறந்து, சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்க முன் வருமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் வேண்டிக்கொள்கிறேன்’’நெடுமாறன் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில், ‘’கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விசயபாஸ்கர் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்’’என்று தெரிவித்துள்ள அவர், ’’சென்னையில் அமைக்கப்பட்டுள்ள, சித்த மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்துள்ளனர் என்பதையும் மக்களுக்கு அறிவித்தால், மக்களும், சித்த மருத்துவத்தை நாடிவரத் தொடங்குவார்கள்’’என்றும் வலியுறுத்தியுள்ளார்.