“ஒரு நல்லது பிறந்தால் அதே நாளில் ஒரு கெட்டதும் பிறக்கும்” : பெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி

“ஒரு நல்லது பிறந்தால் அதே நாளில் ஒரு கெட்டதும்  பிறக்கும்” : பெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி

பெரியார் – மோடியை ஒப்பிட்டு நடிகர் ராதாரவி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் ராதா ரவி பேசினாலே அது சர்ச்சையில் போய் முடியும். அதுவும் சமீப காலமாக அவரின் பேச்சுகள் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகின்றன. திமுக – அதிமுக என திராவிட கட்சிகளுக்குள் மாறி மாறி கட்சி தாவல் செய்து கொண்டிருந்த இவர் திமுக சஸ்பெண்ட் செய்ததால், அதிமுகவில் இணைந்து அடுத்த ஓரிரு மாதங்களில் அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவில் இணைந்தார்.

“ஒரு நல்லது பிறந்தால் அதே நாளில் ஒரு கெட்டதும்  பிறக்கும்” : பெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி

அதற்கு காரணம் ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தான். தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாராவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருந்தார்.இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தது திமுக தலைமை கழகம் என்பதெல்லாம் வேறு கதை.

“ஒரு நல்லது பிறந்தால் அதே நாளில் ஒரு கெட்டதும்  பிறக்கும்” : பெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், மோடி நல்லவர்,பெரியார் கெட்டவர் என்பது போன்ற சர்ச்சை கருத்து கூறியுள்ளார். ஒரு நல்லது பிறந்தால் அதே நாளில் ஒரு கெட்டதும் பிறக்கும் என பெரியார் – மோடி பிறந்த தினமான செப்டம்பர் 17 -யை குறிப்பிட்டு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நல்லதுதான். அவர் பாஜகவில் இணைந்தால் விஷாலுடன் இணைந்து பணியாற்ற தயார். ஒரு காலத்தில் திமுக வெற்றி பெற நல்ல மனிதரான ரஜினியும் ஒரு காரணம் என்றார் . ராதா ரவியின் பெரியார் குறித்த பேச்சு நிச்சயம் சமூக வலைதளத்தில் விவாதமாக மாறும் என்று கூறப்படுகிறது.