இலங்கையில் பெண் போராளிகள் அடையாள தகடு, எலும்புக்கூடு கண்டெடுப்பு

 

இலங்கையில் பெண் போராளிகள் அடையாள தகடு, எலும்புக்கூடு கண்டெடுப்பு

இலங்கையில் தேடுதல் ஆய்வில் பெண் போராளிகளின் அடையாளத் தகடு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர் உரிமைக்காக பல்வேறு குழுக்கள் போராடின. சில அகிம்சை ரீதியாகவும் சில ஆயுதக் குழுக்களாகவும். ஆயுதக்குழுக்களில் முதன்மையாக இருந்தது விடுதலைப் புலிகள் அமைப்பு.

2008 – 09 ஆம் காலத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாகவும், அந்த இயக்கும் அழித்தொழிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது.

இலங்கையில் பெண் போராளிகள் அடையாள தகடு, எலும்புக்கூடு கண்டெடுப்பு

அதன்பின், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடையாளமாக இருப்பவற்றையும் அழிக்கும் விதமாக அரசு செயல்படுவதாகப் புகார் சொல்லப்படுவதுண்டு.

விடுதலைப் புலிகளின் காவல் பகுதியாக இருந்ததாகச் சொல்லப்படும் பளை முகமாலை பகுதியில் இலங்கை ராணுவத்தினர் ஆகழ்வு ஆய்வு மேற்கொண்டனர். இதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றிருந்தனர்.

நீதிபதி முன்னிலையில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு பெண் போராளிகளின் அடையாள தகடு (புலிகள் அமைப்பில் தரக்கூடியது) மற்றும் சீருடைகளும், ஒரு எலும்புக்கூடு, இன்னும் சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பெண் போராளிகள் அடையாள தகடு, எலும்புக்கூடு கண்டெடுப்பு

முகமாலை பகுதியில் கிடைத்த பொருட்களைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் அதேவேளையில் இந்தப் பகுதியில் தொடர்ந்து அகழ்வாய்வு பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தப் பகுதியில் இதற்கு முன்பும் தேடுதல் பணியில் சில பொருட்கள் கிடைத்ததாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.