3 வருஷத்துக்கு அப்புறம் லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி….

3 வருஷத்துக்கு அப்புறம் லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி….

பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நஷ்ட கணக்கை காட்டி வந்தது. இந்நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 13 காலாண்டுகளாக இழப்பை மட்டுமே சந்தித்து வந்த அந்த வங்கி கடந்த மார்ச் காலாண்டில் லாபத்தை சம்பாதித்துள்ளது.

3 வருஷத்துக்கு அப்புறம் லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி….

2019 மார்ச் காலாண்டில் ஐ.டி.பி.ஐ. வங்கி நிகர லாபமாக ரூ.135 கோடி ஈட்டியுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு ரூ.4,918 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டில் (2019-20) ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு ரூ.12,887 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. 2018-19ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ. வங்கி ரூ.15,116 கோடி நிகர நஷ்டம் கண்டு இருந்தது.

3 வருஷத்துக்கு அப்புறம் லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி….

2020 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஐ.டி.பி.ஐ. வங்கியின் மொத்த வாராக்கடன் 27.53 சதவீதமாக உள்ளது. 2019 மார்ச் 31ம் தேதியில் அந்த வங்கியின் வாராக்கடன் 27.47 சதவீதமாகவும், அந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று மொத்த வாராக்கடன் 28.72 சதவீதமாகவும் இருந்தது.