5 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி.. எல்.ஐ.சி. ஹேப்பி

 

5 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி.. எல்.ஐ.சி. ஹேப்பி

ஐ.டி.பி.ஐ. வங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு 2020-2021ம் நிதியாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.1,359 கோடி ஈட்டியுள்ளது.

எல்.ஐ.சி. கட்டுப்பாட்டில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2020-2021ம் நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.1,359 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டில் (2019-20) ஐ.டி.பி.ஐ. வங்கி ரூ.12,887 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி.. எல்.ஐ.சி. ஹேப்பி
எல்.ஐ.சி.

2020-2021ம் நிதியாண்டில் 4வது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஐ.டி.பி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.512 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 4 மடங்கு அதிகமாகும். 2019-20ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் ஐ.டி.பி.ஐ. வங்கி நிகர லாபமாக ரூ.135 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தை கண்ணில் காட்டிய ஐ.டி.பி.ஐ. வங்கி.. எல்.ஐ.சி. ஹேப்பி
ஐ.டி.பி.ஐ. வங்கி

2020-2021ம் நிதியாண்டில் 4வது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஐ.டி.பி.ஐ. வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,240 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாகும். கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஐ.டி.பி.ஐ. வங்கியின் மொத்த வாராக் கடன் 27.53 சதவீதத்தலிருந்து 22.37 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் 4.19 சதவீதத்திலிருந்து 1.97 சதவீதமாக குறைந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது ஐ.டி.பி.ஐ. வங்கி பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.41 சதவீதம் உயர்ந்து ரூ.36.35 ஆக அதிகரித்து இருந்தது.