Home தமிழகம் சேகர் ரெட்டியின் நண்பரின் தந்தை வீட்டில் ஐடி ரெய்டு!

சேகர் ரெட்டியின் நண்பரின் தந்தை வீட்டில் ஐடி ரெய்டு!

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர் முத்துக்குமார். பண்ருட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள இவரது தந்தை சுகி சந்திரன் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்றிரவு முதல் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்த புகாரில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

முன்னதாக 2016ல் பணமதிப்பிழப்பின் போது தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கட்டுகட்காக ரூ. 2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் பழைய நோட்டுகளை, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாகப் புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு 247.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கானது சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஆறு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்த்ககது.

மாவட்ட செய்திகள்

Most Popular

விஹாரியின் நிதான ஆட்டத்திற்கு பின்னே யார் இருந்தார் தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி அற்புதமான ஒரு முடிவை கொடுத்திருக்கிறது. ஒருநாள் டி20 டெஸ்ட் மூன்று வகையான போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள்...

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை : மீண்டும் தோல்வியை தழுவிய மத்திய அரசு!

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...

4 தமிழக மீனவர்களின் உடல்கள்: இலங்கையில் பிரேத பரிசோதனை!

கச்சத்தீவு பகுதியில் உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கச்சத்தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசைப்படகில் தமிழக...

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும் 28ம் தேதி திறக்கப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவையடுத்து சென்னை போயஸ் கார்டனில் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!