தனியார் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

 

தனியார் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

தனியார் நகைக்கடைக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலமாக தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள், வரி ஏய்ப்பு புகாரில் சிக்குகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஹெரிடேஜ் மதுரை என்ற ஓட்டல் குழுமத்துக்கு சம்பந்தப்பட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெரிடேஜ் குழுமம் ரூ.1,000 கோடி வருமானத்தை மறைத்ததும், ரூ.500 கோடி மதிப்புள்ள 300 ஏக்கர் நிலம் வாங்கியதும், ஹெரிடேஜ் உட்பட இரண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தனியார் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

இந்த சூழலில், ஒரு தனியார் நகைக்கடையில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், அதிகாரிகள் சோதனை சென்னை நெல்லை, மதுரை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 32 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எந்த நகைக்கடை என்பது குறித்து விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சோதனையில் முடிவில் விவரங்கள் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.