10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

 

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. முந்தைய வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மதிப்பெண் கணக்கிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

அதனடிப்படையில் சிஐஎஸ்சிஇ வாரியம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. https://www.cisce.org. என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி மாணவர்கள் வழங்கியிருக்கும் செல்போன் எண்ணிற்கும் மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.

ஐசிஎஸ்இ-ல் 10 வகுப்பு மாணவர்கள் 99.98 சதவீதமும், ஐஎஸ்இ- ல் 12ம் வகுப்பு மாணவர்கள் 99.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 10ம் வகுப்பில் மாணவர்களுடன் ஒப்பிடும் போது மாணவிகள் 0.2 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் சிஐஎஸ்சிஇ வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் தங்களது ஐ.டியை லாகின் செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மதிப்பெண்களில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை பள்ளிகளில் சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.