“பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கம்” – ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

“பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கம்” – ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு தணிந்திருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருந்த பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

“பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கம்” – ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பாதிப்பு குறைவது போல குறைந்து மூன்றாவது அலை உருவெடுக்கும் என வல்லுநர்கள் தெரிவித்ததைப் போலவே தற்போது பாதிப்பு திடீரென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மூன்றாவது அலை உருவாகிவிட்டதா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இந்த நிலையில், பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கம்” – ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இது குறித்து பேசிய ஐசிஎம்ஆர்-ஐ சேர்ந்த மருத்துவர் சமீரன், இரண்டாம் அலை தீவிரமாக தாக்காத மாநிலங்களில் தற்போது அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம். கொரோனா பாதிப்புக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.