இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும்.. ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும்.. ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெங்களூருவில் உள்ள தேசிய நோய் தகவல், ஆராய்ச்சி மையமும் இணைந்து அண்மையில் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டிவிட்டரில், தேசிய புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் நம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும்.. ஐ.சி.எம்.ஆர். தகவல்
நோயாளி

மேலும், 2025ம் ஆண்டுக்குள் நம் நாட்டில் 15.7 லட்சம் புற்றுநோயாளிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் நம் நாட்டில் புற்றுநோயாகளின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் அதிகரிக்கும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல் நமக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும்.. ஐ.சி.எம்.ஆர். தகவல்
நோயாளி, மருத்துவர்

நம் நாட்டில் வடமாநில மக்கள் மத்தியில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் அதிகமாக உள்ளது. புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல், வாய், வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவது வழக்கமானதாக உள்ளது. இதுதவிர ரத்த புற்றுநோய், பெண்களுக்கு மட்டுமே வரும் மார்பக புற்றுநோய் என பலவிதமான புற்றுநோய்கள் உள்ளன. இந்த புற்றுநோய்களுக்கு தற்போது நவீன சிகிச்சைகள் வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.