ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் லாபம் ரூ.346 கோடி… இறுதி டிவிடெண்டாக ரூ.4 வழங்க பரிந்துரை

 

ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் லாபம் ரூ.346 கோடி… இறுதி டிவிடெண்டாக ரூ.4 வழங்க பரிந்துரை

2020 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி நிகர லாபமாக ரூ.345.68 கோடியாக உயர்ந்துள்ளது.

தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி நிகர லாபமாக ரூ.345.68 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 22.6 சதவீதம் அதிகமாகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் லாபம் ரூ.346 கோடி… இறுதி டிவிடெண்டாக ரூ.4 வழங்க பரிந்துரை
ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ்

கடந்த மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியின் மொத்த நேரடி பிரிமீயம் வருவாய் ரூ.3,478 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9.4 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி பங்கு விலை 3.74 சதவீதம் குறைந்து ரூ.1,364ஆக சரிந்தது

ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் லாபம் ரூ.346 கோடி… இறுதி டிவிடெண்டாக ரூ.4 வழங்க பரிந்துரை
ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ்

ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு 2020-21ம் நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.4 வழங்க பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்று ரூ.4 வழங்கி இருந்தது.