ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் ரூ.4,403 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் ரூ.4,403 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.4,402.61 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.4,402.61 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 260.5 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபமாக ரூ.1,221.4 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் ரூ.4,403 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

கடந்த மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிகர வட்டி வருவாயாக (வட்டி வரவுக்கும், வட்டி செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.10,431.13 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.8,926.90 கோடி ஈட்டியிருந்தது. ஆக, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் 16.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் ரூ.4,403 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

2021 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர வாராக்கடன் 1.26 சதவீதத்திலிருந்து 1.14 சதவீதமாக குறைந்துள்ளது. 2021 மார்ச் இறுதி நிலவரப்படி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 5,266 கிளைகளும், 14,136 ஏ.டி.எம்.களும் உள்ளன. தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது.