வட்டி வருவாய் அமோகம்.. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு கிடைத்தது ரூ.2,599 கோடி லாபம்

வட்டி வருவாய் அமோகம்.. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு கிடைத்தது ரூ.2,599 கோடி லாபம்

நம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபமாக ரூ.2,599.1 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 36.2 சதவீதம் அதிகமாகும்.

வட்டி வருவாய் அமோகம்.. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு கிடைத்தது ரூ.2,599 கோடி லாபம்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த ஜூன் காலாண்டில் நிகர வட்டி வருவாயாக ரூ.9,280 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். சென்ற காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வழங்கிய கடன் 7 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 21 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேசமயம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.69 சதவீதமாக குறைந்துள்ளது.

வட்டி வருவாய் அமோகம்.. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு கிடைத்தது ரூ.2,599 கோடி லாபம்

கடந்த ஜூன் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மொத்த வாராக்கடன் 5.46 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனது துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. லாம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3.96 சதவீத பங்குகளை ரூ.2,250 கோடிக்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்சியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 1.5 சதவீத பங்குகளை ரூ.840 கோடிக்கும் விற்பனை செய்தது.