• February
    24
    Monday

Main Area

Main



ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வாடிக்கையாளரா நீங்க? இனி நீங்க ஏ.டி.எம்.ல டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.....

ஏ.டி.எம்.ல் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி
ஏ.டி.எம்.ல் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி

டெபிட் கார்டை பயன்படுத்தாமல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களிலிருந்து பணம் எடுக்கும் வசதி எங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி  ஏ.டி.எம்.களில் அந்த வாடிக்கையாளர்கள் எப்படி டெபிட் கார்டு பயன்படுத்தாமல் எப்படி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வேண்டும் என்பதை பாருங்க...... 

ஐ.சி.ஐ.சி.ஐ.

1. ஐ.சி.ஐ.சி.ஐ. மொபைல் ஆப் 'imobile'ல் லாக்இன் செய்யுங்க.
2.  அடுத்து  சர்வீசஸ் அண்டு கேஷ் வித்டிராவல் அட் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ஏ.டி.எம். தேர்வு  செய்யுங்க
3. தேவையான பணத்தை குறிப்பிட வேண்டும், வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.  4 டிஜிட் தற்காலிக பின் உருவாக்கி சமர்ப்பிக்க  வேண்டும்.
4. உடனே உங்க போனுக்கு ஓ.டி.பி. வரும்.
5 அதன் பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.க்கு சென்று ஏ.டி.எம்.ல் கார்டுலெஸ் கேஷ் வித்டிராவல் தேர்வு செய்ய வேண்டும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.
6. உங்க மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்
7. அடுத்த ஓ.டி.பி. குறிப்பிட வேண்டும்
8. தற்காலிக பின் நம்பரை குறிப்பிட வேண்டும்
9.  அடுத்து எடுக்க இருக்கும் பணத்தை குறிப்பிட வேண்டும். பின் ஏ.டி.எம்.லிருந்து வரும் பணத்தை எடுத்து கொள்ள வேண்டியதுதான்.
10. பணம் எடுப்பதற்கான கோரிக்கை மற்றும் ஓ.டி.பி. அடுத்த நாள் நள்ளிரவு வரை செல்லுபடியாகும்.

2018 TopTamilNews. All rights reserved.