கறுப்புக் கவுனி அரிசியில் ஐஸ்கிரீம்! பாரம்பரியம் மீட்கும் மண்வாசனை மேனகா!!

 

கறுப்புக் கவுனி அரிசியில் ஐஸ்கிரீம்! பாரம்பரியம் மீட்கும் மண்வாசனை மேனகா!!

கவுனி அரிசி… பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று. குறிப்பாக கறுப்பு கவுனி அரிசிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. வாரத்தில் இரண்டுமுறை சமைத்துச் சாப்பிட்டால் இதிலுள்ள மருத்துவப் பலன்கள் நமக்குக் கிடைக்கும். புதிதாக திருமணமான ஆண்கள் இந்தக் கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம். இந்த அரிசியில் வடித்த சோற்றுக் கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும். இந்த அரிசியில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

கறுப்புக் கவுனி அரிசியில் ஐஸ்கிரீம்! பாரம்பரியம் மீட்கும் மண்வாசனை மேனகா!!ஐஸ்கிரீம்:
வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட குறைபாடுகளைப் போக்கும். ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ள இந்த அரிசியை உண்பதால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானப் பிரச்னை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும். இரும்புச்சத்து இருப்பதால் நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.

இத்தகைய சிறப்புவாய்ந்த அரிசியில் ஐஸ்கிரீம் தயாரித்து அசத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த மேனகா. மண்வாசனை என்ற பெயரில் பாரம்பரிய அரிசி ரகங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வரும் அவர் பாரம்பரிய அரிசிகளை மதிப்புக்கூட்டி விற்று வருகிறார். கறுப்பு கவுனி அரிசியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் அவரிடம் அதுபற்றி கேட்டோம். அதுகுறித்து பேசினார்.

கறுப்புக் கவுனி அரிசியில் ஐஸ்கிரீம்! பாரம்பரியம் மீட்கும் மண்வாசனை மேனகா!!

கறுப்புக் கவுனி:
‘‘பொதுவாக ஐஸ்கிரீம் தயாரிக்கும்போது வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பார்கள். ஆனால், நான் அதற்குப் பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கிறேன். ஐஸ்கிரீம் மிருதுவாக இருப்பதற்காக ஸ்டெபிலைசர் என்னும் கெமிக்கல் பயன்படுத்துவார்கள். இன்னும் பல ரசாயனப்பொருட்களைச் சேர்த்துதான் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஐஸ்கிரீமில் ரசாயனங்கள் எதுவும் சேர்ப்பதில்லை.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் நினைவு தினத்தில் கறுப்பு கவுனி அரிசியில் செய்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தினேன். ஐயா நெல் ஜெயராமனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த நிகழ்வை நடத்தியதில் பெருமை கொள்கிறேன். தமிழகத்தில் ஏன் இந்திய அளவில் முதல்முறையாக நமது பாரம்பரியமான கறுப்புக் கவுனி அரிசியைக் கொண்டு ஐஸ்கிரீமை தயாரித்துள்ளேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்விதமாக இந்த ஐஸ்கிரீம் இருக்கும்.

 

கறுப்புக் கவுனி அரிசியில் ஐஸ்கிரீம்! பாரம்பரியம் மீட்கும் மண்வாசனை மேனகா!!இயற்கைப் பொருள்:
இது 100 சதவிகிதம் இயற்கை பொருட்களால் ஆனது. கறுப்புக் கவுனி அரிசியுடன் பனங்கற்கண்டு, நாட்டு மாட்டுப்பால் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால் எந்தவிதமான உடல் நலக்கோளாறுகளும் ஏற்படாது. பனங்கற்கண்டுக்கென நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதால் அது கூடுதலாக பலன் தரும்.

மேலும் இன்றைக்கு பல்வேறு ரசாயனங்கள் நிறைந்த பாலைத்தான் நாம் அருந்திக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் பசு மாட்டுப் பாலைக் கொண்டு ஐஸ்கிரீம் தயாரித்துள்ளேன். இதை எல்லோரும் தாராளமாக உண்ணலாம். சுப நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளில் இது போன்ற இயற்கை முறையிலான பாரம்பரிய உணவுப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்தலாம்”.
இவ்வாறு கூறிய மேனகா வரும்காலங்களில் இதுபோன்ற பாரம்பரிய அரிசிகளில் பல்வேறு தின்பண்டங்களைத் தயாரித்து மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறார்.