உலகக்கோப்பையில் மீண்டும் 14 அணிகள் – ஐசிசி அதிரடி அறிவிப்பு!

 

உலகக்கோப்பையில் மீண்டும் 14 அணிகள் – ஐசிசி அதிரடி அறிவிப்பு!

மீண்டும் பழைய நடைமுறைப்படி 14 அணிகள் கலந்துகொள்ளும் வகையில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. நேற்று காணொலிக் காட்சியாக நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2023ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. அப்போது தான் 2027 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர்களில் 14 அணிகளை அனுமதிப்பது உறுதி செய்யப்பட்டது.

உலகக்கோப்பையில் மீண்டும் 14 அணிகள் – ஐசிசி அதிரடி அறிவிப்பு!

அதேபோல ஏற்கெனவே திட்டமிட்டப்படி 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையில் 10 அணிகள் மட்டுமே கலந்துகொள்ளும் என்றும் சொல்லப்பட்டது. 1999, 2003ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகளை 2027, 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர்களில் மீண்டும் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 54 போட்டிகள் கொண்டதாக தொடராக உலகக்கோப்பை தொடர் இருக்கும்.

உலகக்கோப்பையில் மீண்டும் 14 அணிகள் – ஐசிசி அதிரடி அறிவிப்பு!

உலகக் கோப்பை போட்டிகளில் சுவாரசியத்தைக் கூட்டும் நோக்கத்திலேயே உலகளவில் பலமான 10 அணிகளை மட்டுமே ஐசிசி அனுமதித்தது. இந்த நடைமுறை 2015ஆம் ஆண்டு மாற்றியது. இதனால் கத்துக்குட்டி அணிகள் பங்கேற்க முடியாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது அந்த அணிகளின் நலனைக் கருத்தில்கொண்டும் ரசிகர்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து ஐசிசி ஆரோக்கியமான இம்முடிவை எடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.