2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி தீவிரம்

 

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி தீவிரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8ம் தேதியன்று முடிந்தது. இதில் இந்தியா 7 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பிடித்தது. இந்த ஒலிம்பிக்கில் 2 வெள்ளி, 4 வெண்கலம் மற்றும் ஒரு தங்க பதக்கத்தை இந்தியா வென்றது. ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனையை படைத்தார்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி தீவிரம்

இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை இணைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு செவி சாய்த்த ஐசிசி கவுன்சில் , வரும் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை இணைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி தீவிரம்

இதுகுறித்து பேசிய ஐசிசி தலைவர் க்ரேக் பார்க்ளே, “கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒலிம்பிக் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைவது ஒரு சிறந்த விஷயமாக இருக்கும். ஆனால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் சில விளையாட்டுகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், கிரிக்கெட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய நேரம் இது. அதற்காக ஒலிம்பிக் அமைப்புடன் கைக்கோர்க்கிறோம். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பது பற்றி ஆலோசனை நடத்தியது மட்டுமல்லாமல், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய குழுவையும் ஐசிசி ஏற்படுத்தியிருக்கிறது” எனக் கூறினார்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி தீவிரம்

ஒலிம்பிக் வரலாற்றில் கடைசியாக 1900 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அதற்கு அடுத்தபடியாக வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.