Home விளையாட்டு  ’விராட்கோலி -நம்பர் 1; தோனி நம்பர் 26 ஐசிசி தர வரிசைப் பட்டியல்! #ICC_ODI_Ranking

 ’விராட்கோலி -நம்பர் 1; தோனி நம்பர் 26 ஐசிசி தர வரிசைப் பட்டியல்! #ICC_ODI_Ranking

ஐசிசியின் தர வரிசையில் யார் யார் எந்தெந்த இடங்களைப் பிடிக்கிறார்கள் என்பதை கிரிக்கெட் ரசிகர் கூட்டம் கூர்ந்து கவனிக்கும். ரசிகர்க்ள் மட்டுமல்ல கிரிக்கெட் விமர்சகர்களும் வீரர்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவினரும் கவனிப்பர். அந்தளவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒன்று.

கோலி

ஐஐசியின் ஒருநாள் போட்டியின் தர வரிசையில் பேட்டிங் பிரிவில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார். 871 பாயின்ட்டுகள் அவர் பெற்றிருக்கிறார்.

ரோகித்

அவரை அடுத்து இரண்டாம் இடத்திலும் ஓர் இந்திய வீரர்தான். அவர் சந்தேகமே இல்லை. அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா. இவர் பெற்றிருக்கும் பாயின்ட் 855. மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் பாபர் அஸாம், நான்காம் இடத்தில் நியூஸ்லாந்து நாட்டின் ரோஸ் டெய்லரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

MSDhoni

இதில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் வேறு யாரும் இடம்பெற வில்லை. 17 –வது இடத்தில் ஷக்கீர் தவானும், 26 – வது இடத்தில் மகேந்திர சிங் தோனியும் இடம்பிடித்துள்ளனர்.

டெஸ்ட் போட்டியின் பேட்டிங் பிரிவில் கோலி இரண்டாம் இடத்திலும் செட்டிஸ்வர் 8-ம் இடத்திலும் ரஹேனா 10-ம் இடத்திலும் உள்ளனர்.

20 ஓவர் போட்டியின் பேட்டிங் பிரிவில், 2-ம் இடத்தில் லோகேஷ் ராகுலும், 10- வது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.

பும்ரா

ஒருநாள் போட்டியில் பெளலிங் பிரிவில் முதல் இடத்தில் நியூஸ்லாந்து நாட்டின் ட்ரெண்ட் போல்ட் இடம் பெற்றுள்ளர். இரண்டாம் இடத்தை இந்திய வீரர் பும்ரா பிடித்துள்ளார். அவரைத் தவிர வேறு இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களைப் பிடிக்க வில்லை.

ஒரு நாள் போட்டியின் ஆல்ரவுண்டர் பிரிவில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா மட்டும்தான். அவர் எட்டாவது இடத்தில் உள்ளார்.

IND vs NZ

கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் ஒருநாள் போட்டிகளின் பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

டெஸ்ட் போட்டிகளின் பிரிவிலும் ஆஸ்திரேலியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது நியூஸ்லாந்து இரண்டாம் இடமும் இந்தியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

20 ஓவர் போட்டிகளின் பிரிவில், ஆஸ்திரேலியா முதலிடத்திலும் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வருடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முதல்நாள்...

கொரோனாவுக்கு அப்புறம் இதான் முதல்முறை: வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நீண்ட நாட்களுக்கு பின் திரை முன் தோன்றிய நடிகை வனிதா விஜயகுமார், கொரோனா லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர்பாலை எளிமையாக திருமணம் செய்துகொண்டார். முதல்...

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் கஸ்தூரி

”அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்” என்ற பாடல்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. 80 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும்...

தீவிபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு ஈரோட்டில் தீ விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி லட்சுமி (58). இவர்...
Do NOT follow this link or you will be banned from the site!