ICC பெஸ்ட் டீமில் தோனி, கோலி எல்லாம் இருக்காங்க… இந்த விஷயத்தைக் கவனிச்சீங்களா?

ICC பெஸ்ட் டீமில் தோனி, கோலி எல்லாம் இருக்காங்க… இந்த விஷயத்தைக் கவனிச்சீங்களா?

ஐசிசி தனது பெஸ்ட் டீம்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அது பல இடங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஐசிசி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோரும் இந்திய வீரர்களே. மேலும், டேவிட் வார்னர், டி வில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், மிட்ச்செல் ஸ்டார்க், போல்ட், இம்ரான் தாஹீர், மலிங்கா ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.

ICC பெஸ்ட் டீமில் தோனி, கோலி எல்லாம் இருக்காங்க… இந்த விஷயத்தைக் கவனிச்சீங்களா?

ஐசிசி டி20 போட்டி அணியின் கேப்டன் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரஷித் கான், பும்ரா ஆகியோரும் இந்திய வீரர்களே. மேலும், கிறிஸ் கெயில், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பொல்லார்டு, மலிங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஐசிசி டெஸ்ட் போட்டி அணியின் கேப்டன் இந்தியாவின் விராட் கோலி. ரவிசந்திர அஸ்வினும் இந்திய வீரரே. மேலும், குக், வார்னர், வில்லியம்சன், ஸ்மித், சங்கரகார, பென் ஸ்டோக்ஸ், ஸ்டேய்ன், ஸ்டுவர்ட் போர்டு, ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

ICC பெஸ்ட் டீமில் தோனி, கோலி எல்லாம் இருக்காங்க… இந்த விஷயத்தைக் கவனிச்சீங்களா?

சரி, இதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இந்தப் பட்டியலில் ஒருவர் கூட பாகிஸ்தான் வீரர் இல்லை. (ஒருநாள் போட்டியில் இம்ரான் தாஹீர் தேர்வாகி இருந்தாலும் அவர் தற்போது சவுத் ஆப்பிரிக்காவுக்காவே ஆடுகிறார்) இதுதான் அந்நாட்டு முன்னாள், இன்னாள் வீரர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

ICC பெஸ்ட் டீமில் தோனி, கோலி எல்லாம் இருக்காங்க… இந்த விஷயத்தைக் கவனிச்சீங்களா?

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் சோயிப் அக்தர், ஐசிசியின் இந்தப் பட்டியலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். டி20 போட்டிகளில் கலக்கி வரும் பாபர் ஆசாம் பெயர்கூட இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது. எந்த அடிப்படையில் இந்தப் பட்டியலை தேர்ந்தெடுத்தார்கள் என கோபப்பட்டிருக்கிறார்.