கிரிக்கெட் போட்டியின் போது பந்தில் எச்சில் தடவ தடை- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

 

கிரிக்கெட் போட்டியின் போது பந்தில் எச்சில் தடவ தடை- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளின்போது பந்தில் உமிழ்நீர் தடவ தடை விதிக்க ஐசிசி நீண்ட நாட்களாகவே திட்டமிட்டுவந்தது. கிரிக்கெட் போட்டிகளின்போது பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக வீரர்கள் உமிழ்நீர் தடவி நன்றாக தேய்ப்பார்கள். இது சிறப்பாக பந்து வீச உதவும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்துவந்தனர்.

கிரிக்கெட் போட்டியின் போது பந்தில் எச்சில் தடவ தடை- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

இந்நிலையில் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளிச்சிட வைக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. அனில் கும்பிளே தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஐசிசி ஏற்றது. இதனிடையே பந்தை பளபளப்பாக்க உமிழ்நீருக்கு பதிலாக வியர்வையை வீரர்கள் பயன்படுத்தலாம் என்றும் வியர்வை மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார். வீரர்களின் கை அல்லது நெற்றியில் இருந்து வரும் வியர்வை உமிழ்நீரைப் போல வேலை செய்யும் என்றும் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.