உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகளை அதிரடியாக மாற்றிய ஐசிசி!

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகளை அதிரடியாக மாற்றிய ஐசிசி!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஒன்பது அணிகள் இத்தொடரில் பங்கேற்றன, இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் ஆறு தொடர்களில் (சொந்த மண்ணில் 3, அயல்நாட்டில் 3) விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகளை நடத்தலாம். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகளை அதிரடியாக மாற்றிய ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகளை அதிரடியாக மாற்றிய ஐசிசி!

போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் படி புள்ளிகள் பிரித்தளிக்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அப்போட்டி டிரா ஆகும் பட்சத்தில் இரு அணிகளும் சாம்பியனாக அறிவிக்கப்படும். இவ்வாறான விதிமுறைகளை ஐசிசி வகுத்து தொடரை நடத்த திட்டமிட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது. முதல் வருடத்திலிருந்தே இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தது.

இச்சூழலில் கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு கோப்பை வாய்ப்பு கைநழுவிப் போனது. இதற்கு புள்ளி கணக்கிடும் முறையே காரணமாகக் கூறப்பட்டது. இதனால் விதிகளை மாற்ற ஐசிசி கவுன்சில் ஆலோசனை செய்துவந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகளை அதிரடியாக மாற்றிய ஐசிசி!

அதன்படி இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய விதிகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி டையில் முடிந்தால், 6 புள்ளிகளும், சமனில் முடிந்தால் 4 புள்ளிகளும் வழங்கப்படும். எத்தனை போட்டிகள் கொண்ட தொடரோ அதற்கேற்ப புள்ளிகள் பிரிக்கப்படும். எடுத்துக்காட்டாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி ஒரு அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றால், வெற்றிபெற்ற அணிக்கு 40 புள்ளிகளும் தோல்விபெற்ற அணிக்கு (1 டிரா, 1 சமன்) 16 புள்ளிகள் கிடைக்கும். 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் இம்முறையே பின்பற்றப்படும்.