100 நாட்களில் தீர்வு: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

 

100 நாட்களில் தீர்வு: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த, திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு பிறகு சென்னை கோபாலபுரம் இல்லம், கருணாநிதி அண்ணா நினைவிடம், பெரியார் திடல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ஸ்டாலின், தலைமைச் செயலகம் விரைந்தார்.

100 நாட்களில் தீர்வு: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

அங்கு அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த முதல்வர் அறையில் இருந்த முதல்வர் இருக்கையில் அமர்ந்த ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,000 வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட 4 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் ஒன்று ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம்.

தேர்தல் பரப்புரையின் போது மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டன. பதவியேற்ற பிறகு 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் அந்த மனுக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதன் படி, 100 நாட்களுக்குள் அந்த மனுக்களுக்கு தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.