Home தமிழகம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பை தொடர வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பை தொடர வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிரானைட் முறைகேடு தொடர்பாக வழக்கை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரித்தது. விசாரணையின் முடிவில் அறிக்கை தாக்கல் செய்த சகாயம், கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் திடீரென விருப்ப ஓய்வு பெறுவதாக சகாயம் அரசுக்கு எழுதியிருந்த கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணியில் இருந்து அவர் ஓய்வு பெற 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் நேர்மையான அதிகாரியான சகாயம், விருப்ப ஓய்வு கேட்பது ஏன்? எனக் கேள்வி எழுந்தது. கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க தொடங்கிய பிறகு அவருக்கு பல மிரட்டல்கள் வந்தது தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெற தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு விசாரணையில், சகாயத்துக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பைத் தொடர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து

மம்தா பானர்ஜி 62 ஆயிரம் வாக்குகளைதான் நம்பியுள்ளார். ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழங்க என்னிடம் 2.13 லட்சம் பேர் உள்ளனர் என்று பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதலில் குறைவு உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் கேபிடல் ஹில்லில் (அந்நாட்டு பாராளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள்...

உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட கேலரியில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தர பிரதேச விதான் பரிஷத் (சட்டப்பேரவை)...

ஊர் பெயரை மாற்றினால்தான் பிரச்சினை.. நாங்க பழத்தின் பெயரை மாத்துறோம்.. குஜராத் பா.ஜ.க. அரசு அதிரடி

குஜராத் அரசு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றியுள்ளது. நல்ல வேளையாக இதற்கு எந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிராவில் அவுரங்கபாத் நகரின் பெயரை...
Do NOT follow this link or you will be banned from the site!