குழந்தை பெற்ற 14 நாட்களில் கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

குழந்தை பெற்ற 14 நாட்களில் கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

குழந்தை பெற்ற 14 நாட்களில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பணிக்கு திரும்பிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் துணை ஆட்சியராக பணியாற்றியவர் சௌமியா பாண்டே. இவர் கொரோனா பேரிடர் காலத்தில் நோடல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

குழந்தை பெற்ற 14 நாட்களில் கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

இந்நிலையில் சௌமியா பாண்டே கர்ப்பமாக இருந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அலுவலகம் வந்து பணிசெய்து வருகிறார். இதை தொடர்ந்து கடந்த 14 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் சௌமியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் அவர் தனது கைக்குழந்தையுடன் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் .

குழந்தை பெற்ற 14 நாட்களில் கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாத காலம் விடுமுறை அளிக்கப்படும். இருப்பினும் கொரோனா நேரத்தில் பணிச்சுமை அதிகம் இருப்பதால் துணை ஆட்சியர் சௌமியா மீண்டும் பணிக்கு திரும்பியதாக கூறியுள்ளார் . துணை ஆட்சியர் சௌமியாவின் செயலை கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.