Home விளையாட்டு கிரிக்கெட் தோனி இல்லை… விராட் கோலியும் கிடையாதா? - இயன் பிஷப் லெவன் டீம்

தோனி இல்லை… விராட் கோலியும் கிடையாதா? – இயன் பிஷப் லெவன் டீம்

ஐபிஎல் தொடர் ரொம்பவே விறுவிறுப்பாக போய்ட்டு இருக்கிறது. பலரும் யூகித்த அணிகள் பின்தங்கியும் பல போட்டிகளில் வெளியேறிய அணிகள் முன்னேறியும் வருகின்றன.

தற்போதைய பாயிண்ட் டேபிள் வரிசைப் படி, மும்பை முதலிடத்திலும், பெங்களூர் இரண்டாம் இடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும், பஞ்சாப் நான்காம் இடத்திலும் உள்ளன. கடைசி இடமான எட்டாம் இடத்தில் சென்னை உள்ளது.

இந்த சீசனில், இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், நடராஜன், சஹல், வாஷிங்டன் சுந்தர், கில் உள்ளிட்டோர் தங்களின் அபரிமிதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட்டரும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் பிஷப், தனது ட்ரீம் ஐபிஎல் அணியைத் தேர்தெடுத்திருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் நன்றாக விளையாட வில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால், அவர் பெயர் இயன் பிஷப் அணிப் பட்டியலில் இல்லை என்பது பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால், விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் பெயர்களும் இல்லை என்பது நிச்சயமாக அதிர்ச்சிதான். மேலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் சஞ்சு சாம்சன், யாக்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் பெயர்களும் இல்லை என்பது வருத்தமே.

இயன் பிஷப்பின் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக, கே.எல்.ராகுல் மற்றும் டூ பிளஸி தேர்வாகியுள்ளனர். ஒன் டவுண் சூர்யகுமார், செகண்ட் டவுன் ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்து ஹிர்த்திக் பாண்டியா, பொல்லார்டு ரஷித் கான், முகம்மது ஷமி, ரபாடா, பும்ரா, சஹல். இவர்களே இயன் பிஷப்பின் மனத்திலும் அணியிலும் இடம்பிடித்தவர்கள்.

இந்தப் பட்டியலைப் பார்த்ததும் நிச்சயம் கேப்டன் ஸ்ரேயாஸ் அல்லது ராகுல் என்று நினைப்போம். ஆனால், இயன் பிஷப் செலக்ட் பண்ணியிருப்பது பொல்லார்டு. வைஸ் கேப்டனே ஸ்ரேயாஸ். விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல்.

இளம் வீரர்கள் எனும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்று பார்த்தால் பொல்லார்டு இருப்பது உறுத்தல். ஜடேஜா, சாம்கரன் இடம்பெறாதது ஆச்சர்யம்தான்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!