நான் இருந்திருந்தால் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பேன் – சசிகலா பரபரப்பு பேச்சு!

 

நான் இருந்திருந்தால் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பேன்  – சசிகலா பரபரப்பு பேச்சு!

சசிகலாவின் ஆடியோ தினந்தோறும் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலா தனது கருத்துக்களை ஆணித்தரமாக கூறி வருகிறார். தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அதிமுக கைப்பற்றும் நோக்கில் சசிகலா முன்னெடுத்துள்ள இந்த ஆடியோ விவகாரம் அதிமுக தலைமையில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் இருந்திருந்தால் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பேன்  – சசிகலா பரபரப்பு பேச்சு!

ஈரோட்டை சேர்ந்த சிதம்பரம் என்ற அதிமுக தொண்டரிடம் தேசிய சசிகலா, கொரோனா முழுமையாக முடிவுக்கு வரட்டும் கட்டாயம் நான் வருவேன்; கட்சி இப்போது வேறு மாதிரி சென்றுகொண்டிருக்கிறது . விரைவில் வந்து கட்சியை காப்பாற்றுவேன் .நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது. ஆனால் இன்று நாம் எம்.பி.களை இழந்து நிற்கிறோம். இருக்கும் எம்.பி.களையும் தவறான முடிவுகளால் வேறு கட்சிக்கு தாரைவார்த்த வருகிறோம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் என்னோடு தலைமையில் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.அதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுந்தரிடம் பேசிய சசிகலா, சேலத்தில் கட்சிக்காரர்கள் தன்னிசையாக செயல்பட்டு வருகிறார்கள். கவலைப்படாமல் இருங்கள். நான் எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என்று ஆறுதலாக கூறி வருகிறார்.

நான் இருந்திருந்தால் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பேன்  – சசிகலா பரபரப்பு பேச்சு!

முன்னதாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த வகையில் இதுவரை அதிமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.