‘மு.க.அழகிரியை பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன்’ : கே.பி. ராமலிங்கம்

 

‘மு.க.அழகிரியை பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன்’ : கே.பி. ராமலிங்கம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.

திமுகவின் முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடந்த விழாவில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி முன்னிலை ராமலிங்கம் திமுகவில் இணைந்தார்.

‘மு.க.அழகிரியை பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன்’ : கே.பி. ராமலிங்கம்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மு.க. அழகிரியை பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன். நான் அழகிரிக்கு நெருக்கமானவர் என்பதால் அவரை பாஜகவை இணைக்க முயற்சிப்பேன்” என்றார்.முன்னதாக தனிக்கட்சி ஆரம்பிக்கும் நோக்கில் அரசியல் வியூகங்களை வகுத்துள்ள மு.க.அழகிரிக்கு சமீபத்தில் பாஜக தலைவர் எல். முருகன் அழைப்பு விடுத்தார். அழகிரி பாஜகவுக்கு வந்தால் அவரை ஏற்போம் என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அழகிரி, அரசியல் குறித்து தற்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார்.

‘மு.க.அழகிரியை பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன்’ : கே.பி. ராமலிங்கம்

முன்னதாக திமுக தலைமைக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்ததாக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.