அயோத்தி மசூதி அடிக்கல்நாட்டு விழாவுக்கு செல்ல மாட்டேன்! – யோகி ஆதித்யநாத் பேட்டி

அயோத்தி மசூதி அடிக்கல்நாட்டு விழாவுக்கு செல்ல மாட்டேன்! – யோகி ஆதித்யநாத் பேட்டி

அயோத்திக்கு வெளியே 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ள மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தன்னை அழைக்க மாட்டார்கள், நானும் செல்ல மாட்டேன் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி மசூதி அடிக்கல்நாட்டு விழாவுக்கு செல்ல மாட்டேன்! – யோகி ஆதித்யநாத் பேட்டி
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், அயோத்தியில் இருந்து 30 கி.மீ தொலைவில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கியது.

அயோத்தி மசூதி அடிக்கல்நாட்டு விழாவுக்கு செல்ல மாட்டேன்! – யோகி ஆதித்யநாத் பேட்டி
அயோத்திக்குள் மசூதி கட்டப்படாததால் இஸ்லாமியர்கள் புதிய மசூதி மீது ஆர்வமின்றி உள்ளனர். அரசு ஒதுக்கிய இடத்துக்கு செல்லும் வழியில் ஏராளமான மசூதிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது தொழுகைக்காக அயோத்தியில் இருந்து 25 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய தேவையே இல்லை என்று இஸ்லாமியர்கள் வேதனை தொிவித்திருந்தனர். அரசு ஒதுக்கிய இடத்தில் மசூதி கட்டுவதிலும் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

அயோத்தி மசூதி அடிக்கல்நாட்டு விழாவுக்கு செல்ல மாட்டேன்! – யோகி ஆதித்யநாத் பேட்டி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு செல்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “என் பணியை நான் எப்போதும் செய்துகொண்டே இருப்பேன். மசூதியின் அடிக்கல்நாட்டு விழாவுக்கு யாரும் என்னை அழைக்க மாட்டார்கள். நான் அதற்கு செல்லவும் மாட்டேன்” என்றார். உ.பி முதல்வரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில தனிப்பூர் என்ற இடத்தில் மசூதி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மசூதிக்கு பதில் கல்வி நிலையம், மருத்துவமனை கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்லாமியர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.