“தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்” – கமல் ஹாசன்

 

“தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்”  – கமல் ஹாசன்

திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்”  – கமல் ஹாசன்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், “ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்ற யுகமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். ரஜினி நலம் விரும்பப் வர்களில் நானும் ஒருவன். நண்பர் என்பதால் தேர்தலில் ஆதரவு கோருவேன் . ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது.

“தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்”  – கமல் ஹாசன்

ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. நான் நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்” என்றார்.

“தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்”  – கமல் ஹாசன்

முன்னதாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த ரஜினி அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக இருந்தார். ஆனால் அவரின் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அரசியல் களத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார். ஆனாலும் அரசியலுக்கு வராமலே தேர்தலுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த சூழலில் ரஜினியிடம் கமல் ஹாசன் ஆதரவு கேட்பேன் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.