Home க்ரைம் "வக்கீல் முதல் வியாபாரி வரை" -139 பேர் மீது பொய்யான பாலியல் புகார் கூறிய பெண்

“வக்கீல் முதல் வியாபாரி வரை” -139 பேர் மீது பொய்யான பாலியல் புகார் கூறிய பெண்

கடந்த மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னை 139 பேர் பலாத்காரம் செய்ததாக புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் .ஆனால் அது பொய்யென்று இப்போது அவர் கூறியுள்ளார்.

ஒரு பெண் கடந்த மாதம் ஹைதராபாத் போலீஸ் நிலையத்திற்கு வந்து வக்கீல்கள் ,நடிகர்கள் ,வியாபாரிகள் என பிரபலமான 139 பேர் மீது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார் .போலீசாரும் அந்த புகார் உண்மையென நம்பி 42 பக்கத்துக்கு அவர் சொன்னவர்களின் பெயர் மற்றும் விலாசத்தை எழுதி முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தார்கள் .
பிறகு அவர் குற்றம் சாட்டிய நபர்கள் மீது விசாரணை நடத்தி வந்தார்கள் .ஆனால் இப்போது அந்த பெண் தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லையென்றும் ,ராஜா ஸ்ரீகர் ரெட்டி என்பவரிடம் தான் வேலை கேட்டு சென்ற போது அவர்தான் இப்படி தன்னை அந்த 139 பேர் மீது பாலியல் புகார் கொடுக்க சொல்லி மிரட்டினாரென்றும் கூறினார் .அவர் மேலும் கூறுகையில் அந்த நபர்கள் மற்றும் தான் குறிப்பிட்ட திரைப்பட நடிகர்களிடம் இது விஷயமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ,தான் ரெட்டியின் மிரட்டலால் உயிருக்கு பயந்துதான் இப்படி புகாரளித்தேன் என்றார் .


மேலும் அந்த பெண் 2010 ம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த கணவரின் குடும்பத்தாரும் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார் .இதனால் இவரின் புகார் மீது போலீசார் கவனம் செலுத்தி விசாரித்து வந்த நிலையில், அவர் இப்படி கூறியதால் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசித்து வருகிறார்கள் .

மாவட்ட செய்திகள்

Most Popular

இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

திருநெல்வேலி நெல்லை அருகே இளைஞரிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

‘சும்மா ஆக்டிங்’ தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி...

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...
Do NOT follow this link or you will be banned from the site!