முதல்வர் பேசச்சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினேன்..அவர் போனை வைத்துவிட்டார் -துரைமுருகன்

 

முதல்வர் பேசச்சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினேன்..அவர் போனை வைத்துவிட்டார் -துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த விழாவை அதிமுக புறக்கணித்தது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படியிருக்கும்போது நாங்கள் மட்டும் கருணாநிதி படத் திறப்பு விழாவிற்கு எப்படி செல்லமுடியும் என்று கேட்டிருக்கிறார்.

முதல்வர் பேசச்சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினேன்..அவர் போனை வைத்துவிட்டார் -துரைமுருகன்

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சட்டசபையில் கருணாநிதியின் படத்திறப்பு விழா எதிர்க்கட்சிகள், தோழமை கட்சியினரும் பங்களிப்புடன் நடைபெற வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். ஜனாதிபதி, கவர்னர் அமர்ந்துள்ள வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் . விழாவில் அவர் வாழ்த்தி பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும் என்று சொல்லுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார் முதல்வர். அதன்படியே எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி தொடர்புகொண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தேன்.

முதல்வர் பேசச்சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினேன்..அவர் போனை வைத்துவிட்டார் -துரைமுருகன்

நீங்கள் வர வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். விழா மேடையில் எங்களுடன் சரி சமமாக உட்கார்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர், நான் சேலத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருக்கிறேன். ஊருக்கு சென்றதும் கலந்து பேசி விட்டு சொல்கிறேன் என்று போனை வைத்து விட்டார். அதன் பின்னர் சட்டசபை செயலாளரை தொடர்பு கொண்டு நாங்கள் விழாவிற்கு வரவில்லை என்று கூறிவிட்டார்.

என்னிடம் வரவில்லை என்று சொன்னால் நான் வற்புறுத்தி அழைப்பேன் என்பதால் அவர் காரில் சென்று ஊருக்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். நாங்கள் முழு மனதோடு உரிய மரியாதை தரப்படும் என்று அழைத்து பார்த்தும் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அவரைப் புறக்கணித்து விட்டனர். ஆனால் ஜெயலலிதா படத் திறப்பு விழாவை திமுக புறக்கணித்ததால் கருணாநிதி படத் திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது என்று சொல்கின்றனர். ஆனால் நாங்கள் உரிய முறையில் அழைப்பு விடுத்தும் வரவில்லை. ஆனால் ஜெயலலிதா படத் திறப்பு விழாவிற்கு எங்களை அப்படி அழைக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அழைப்பிதழ் அனுப்பி வைத்திருந்தனர் என்று விளக்கம் அளித்தார்.