‘நான் எல்.ஐ.சி அதிகாரி பேசுறேன்’ புது விதமாக பணம் பறிக்க முயன்ற கும்பல்; உஷாரான மெக்கானிக்!

‘நான் எல்.ஐ.சி அதிகாரி பேசுறேன்’ புது விதமாக பணம் பறிக்க முயன்ற கும்பல்; உஷாரான மெக்கானிக்!

திருச்சி அருகே மெக்கானிக் ஆக பணியாற்றி வரும் நபர் ஒருவரிடம், எல்.ஐ.சி அதிகாரி போல பேசி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

திருச்சி மணப்பாறை அடுத்து ஆழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் பொத்தமேட்டுப்பட்டியில் பைக் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரிடம் தான் மர்ம கும்பல் பணம் பறிக்க முயன்றனர். கடந்த 26ம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்திருக்கிறது.

‘நான் எல்.ஐ.சி அதிகாரி பேசுறேன்’ புது விதமாக பணம் பறிக்க முயன்ற கும்பல்; உஷாரான மெக்கானிக்!

அதில் பேசிய நபர், தான் சென்னை தி.நகரில் அலுவலகத்தில் இருந்து எல்.ஐ.சி அதிகாரி ஆனந்த் பேசுவதாகவும், தாங்கள் பாலிசியை செலுத்தாதால் இதுவரை செலுத்திய பணத்திற்கான ரூ.37 ஆயிரத்துக்கான செக்கை உங்களது முகவரிக்கு அனுப்பினோம் என்றும் ஊரடங்கால் அந்த செக் உங்களிடம் வந்து சேரவில்லை, சென்னைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.

‘நான் எல்.ஐ.சி அதிகாரி பேசுறேன்’ புது விதமாக பணம் பறிக்க முயன்ற கும்பல்; உஷாரான மெக்கானிக்!

அப்போது பழனிசாமி திருச்சியில் இருந்து சென்னைக்கு வர முடியாது என தெரிவிக்க, உங்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு செக் அனுப்பி வைத்துள்ளோம், அதை பார்த்து விட்டு வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கூறுங்கள் என அந்த நபர் கூறியிருக்கிறார். வங்கியில் இருந்து போன் செய்த நபர் ஏன் வங்கி கணக்கு கேட்கிறார் என உஷரான பழனிசாமி, உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

‘நான் எல்.ஐ.சி அதிகாரி பேசுறேன்’ புது விதமாக பணம் பறிக்க முயன்ற கும்பல்; உஷாரான மெக்கானிக்!

இது குறித்து பேசிய பழனிசாமி, இது போன்று மோசடி நடப்பதை நான் ஏற்கனவே அறிந்ததால் அவர்கள் மோசடி செய்யும் கும்பல் என தான் கண்டுப்பிடித்ததாகவும் ஏடிஎம் கார்டின் பாஸ்வோர்டை கேட்டறிந்து மோசடி செய்யும் கும்பல் தான் இப்போது எல்.ஐ.சி பாலிசியை வைத்து மோசடி செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.