“பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு புனிதமான பதவியா?” – லியோனிக்கு எதிராக கொதித்தெழுந்த ராமதாஸ்!

“பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு புனிதமான பதவியா?” – லியோனிக்கு எதிராக கொதித்தெழுந்த ராமதாஸ்!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். லியோனி ஆசிரியராகப் பணியாற்றியவர் என்றாலும், அவர் தமிழ்நாடு முழுவதும் பட்டிமன்ற பேச்சாளராகவே அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் பட்டிமன்றத்தில் கலக்கிய அவர் திமுக மேடைகளிலும் கலக்க தொடங்கினார். திமுகவின் முக்கிய பேச்சாளராக மாறிய லியோனி, கடந்த மக்களவை தேர்தலிலும், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

“பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு புனிதமான பதவியா?” – லியோனிக்கு எதிராக கொதித்தெழுந்த ராமதாஸ்!

எம்எல்ஏ சீட் வழங்கியதற்குப் பின் திமுக தலைவர் ஸ்டாலின், சீட் கிடைக்காதவர்கள் வருத்தம் கொள்ள தேவையில்லை. அவர்களுக்கு தக்க பதவி ஆட்சியமைந்த பிறகு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அந்த வகையில் முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்தபோதே லியோனி கட்சிப் பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்தப் பொறுப்பை ஸ்டாலின் அவரிடம் ஒப்படைத்துள்ளார். அனைத்து நியமனங்களிலும் வெரிகுட் வாங்கிய ஸ்டாலின், லியோனியின் நியமனத்தில் விமர்சனங்களை வாங்கி குவித்தார்.

“பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு புனிதமான பதவியா?” – லியோனிக்கு எதிராக கொதித்தெழுந்த ராமதாஸ்!

அதற்குக் காரணம் லியோனி ஆசிரியர் தானே தவிர, அவர் ஒன்றும் கல்வியலாளர் அல்ல. அவருக்கு இந்தப் பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்று ஒருசாரார் விமர்சித்தனர். அதேபோல மற்றொரு சாரார் பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு இத்தகைய பதவி கொடுப்பது அறமற்ற செயல் என்றனர். இதற்குப் பதிலடி கொடுத்த திமுகவினர், பாடநூல் கழகத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வளர்மதி தான். அவருக்கு லியோனி சளைத்தவர் அல்ல என்றனர். இச்சூழலில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸும் விமர்சித்துள்ளார்.

“பெண்களை இழிவுப்படுத்தியவருக்கு புனிதமான பதவியா?” – லியோனிக்கு எதிராக கொதித்தெழுந்த ராமதாஸ்!

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது. பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியில் இருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.