என் கணவர் கட்டிய தாலியை கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்.. யாரோ ஒருவர் கட்டியதை ஏன் அணியவேண்டும்? அதிரவைத்த பிரபலம்

என் கணவர் கட்டிய தாலியை கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்.. யாரோ ஒருவர் கட்டியதை ஏன் அணியவேண்டும்? அதிரவைத்த பிரபலம்

தமிழ் பெண்களிடையே தாலி செண்டிமெண்ட் அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் இன்னமும் ஏராளானமான தொலைக்காட்சி தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பல பெண்கள் இப்போது திருமணத்திற்குப் பின்னால் தாலி அணிவதை தவிர்த்து வருகின்றனர்.

என் கணவர் கட்டிய தாலியை கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்.. யாரோ ஒருவர் கட்டியதை ஏன் அணியவேண்டும்? அதிரவைத்த பிரபலம்

திருமணத்தின்போது கட்டப்படும் மஞ்சள் கயிற்றினை அணிய பலரும் விரும்புவது இல்லை. அதனால் தான் தாலி செயின் போட்டுக் கொள்கின்றனர். சிலர் அதையும் கூட அணியவில்லை. வெறும் கழுத்துடன் இருக்கின்றனர். தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மறைப்பதற்காக அதில் சில ஆதாயங்கள் இருக்கிறது என்பதால் சிலர் அப்படி செய்கிறார்கள். சிலர் தாலி அணிவதை உறுத்தலாக கருதுகிறார்கள். ஒரு பிரபலம் ஏன் தாலி அணியவில்லை என்பதற்கு அவர் சொல்லும் காரணம்..

என் கணவர் கட்டிய தாலியை கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்.. யாரோ ஒருவர் கட்டியதை ஏன் அணியவேண்டும்? அதிரவைத்த பிரபலம்

காதல் கோட்டை, விடுகதை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் கனி. இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார். யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுடன் பேசி வருகிறார். திருமணமாகி இரண்டு பெரிய பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் கனி தாலி அணியாததை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் தாலி அணிவதில்லை என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்…

என் கணவர் கட்டிய தாலியை கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்.. யாரோ ஒருவர் கட்டியதை ஏன் அணியவேண்டும்? அதிரவைத்த பிரபலம்

‘’தாலி என்பது தமிழர் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம். இடையில் புகுத்தப்பட்ட ஒன்றுதான் தாலி. அதனால் பொதுவாகவே அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என் திருமணம் தாலி கட்டிய தான் நடந்தது. திருமணத்தின் போது மொத்தமாக மஞ்சள் கயிறு போட்ட தாலியை கணவர் எனக்கு தட்டினார். ஆனால் பின்னர் அதை பிரித்துவிட்டு மற்றவர்கள் எனக்கு தாலி கட்டினார்கள். அதாவது என் கணவன் கட்டிய தாலியை பிரித்துவிட்டு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சியில் மற்றவர்கள்தான் வேறு ஒரு சிறிய தாலியை எனக்கு கட்டினார்கள். பெண்கள் நடத்திய சடங்கு இது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

என் கணவர் கட்டிய தாலியை கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்.. யாரோ ஒருவர் கட்டியதை ஏன் அணியவேண்டும்? அதிரவைத்த பிரபலம்

மற்றவர்கள், அதாவது பெண்கள் கட்டிய தாலியில் என்பதால் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என் கணவன் எனக்கு கட்டிய தாலியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்காக வேறு ஒருவர் கட்டிய தாலியை நான் ஏன் அணிய வேண்டும்?’’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

தாலி அணியாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வரும் நிலையில் கனியின் விளக்கம் பரபரப்பையும் பலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.